பக்கம்:மறுமலர்ச்சிக் கவிஞர்கள்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 தட்டுக்களாக்கப்பட்டுள்ளன ; பேசும் படங்களிலும் பாடப்பட்டுள்ளன. கீர்த்தனைகளைப் பாடியதன் மூலம், இசை த்தமிழை மீண்டும் எழுச்சியுறச் செய்த பெருமை யிலே கவிமணியவர்களுக்கும் பங்குண்டு என்பது இகளுல் புலனும். கவிமணியின் உரை.மணிகள் கவிஞர்களிடையே பொதுவானதோர் குறை காணப்படுவது உண்டு. அதுதான், கவிஞர்கள் உரை நடை எழுத அறியாமையாகும். நல்ல கவிகள் உரை நடை எழுதத் தொடங்கினல் அது உரைநடையாக அமையாது. உரைப்பாட்டுமடையாக அல்லது உரை. கடைக் கவிதையாக அமைந்துவிடும். அதுமட்டுமன்று. கவிஞர்களுக்கும் ஆராய்ச்சிக்கும் நீண்ட இடைவெளி உண்டு. கவிஞர்களுக்குப் பகுத்தறிவு அல்லது ஆராய்ச்சி யறிவு மிகுந்துவிடின் கவிதை வராது. ஆக, ஆராய்ச்சியும் உரைநடையும் கவிஞர்க்குப் பகைகள் என்பது பெறப் படும். ஆனல் கவிமணியவர்கள் இக்கருத்துக்கு-விதிக்கு முற்றிலும் விலக்கானவர்கள். இக்கருத்துக்குக் கவிமணி யவர்கள் பெரும் பகையாவார். அந்தப் பகையின் அடையாளமே ' கவிமணியின் உரை.மணிகள் ' என்ப் பெயரியதோர் உரைநடைத் தொகுதியாகும். இத்தொகுதி யிலே சேர்க்கப்படாத தமிழ் உரை.மணிகளும் ஆங்கில உரை.மணிகளும் உள. கவிமணி அவர்கள் கவிதையிலே பெரும் பொழுதைக் கழித்த போதிலும் இடையிடையே ஆராய்ச்சிக் கட்டுரைகள் வரைவதிலும் ஈடுபட்டார். கல்வெட்டாராய்ச்சியிலே கவிமணிக்கு மிகுந்த ஈடு பாடுண்டு. சில மலையாளிகள் கோவில்களிலே இருந்த