பக்கம்:மறுமலர்ச்சிக் கவிஞர்கள்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 விளங்குவது சந்தமே ஆம். இதனலன்ருே Poetry is a musical Composition’ GT corport gp(5 Gup&ot’ı Ljø53% கவிவாணர். பெண்ணுரிமையும் பெருமையும் இடையிருட் காலத்தே ஏற்பட்ட கேடுகளுள் த'லயாயது பெண்கள் தங்கள் உரிமையினை இழந்த மையேயாகும். மக்களில் பலர் பெண் இனத்தையே வெறுத்து ஒதுக்கத் தலைப்பட்டனர். பெண்களின் உரிமை பறிக்கப்பட்டது : பல துறைகளிலும் பெண்களின் பங்கு புறக்கணிக்கப்பட்டது : கல்வி பெண்களுக்கு மறுக்கப்பட்டது. முடிவில் பெண்ணின் பெருமை அடியோடு சிதைக்கப்பட்டது. பெண்ணை வெறுத்துச் சிலர் பாடவும். தலைப் பட்டனர். கூற்று, கொடுங்காற்று, கரும்புலி, நச்சரவு, பேய் முதலியவற்றினும் கொடியவளாகப் பெண் இழித்தும் டி.ழித்தும் பேசப்பட்டாள். அதன் காரண மாகப் பெண்ணினம் கிலே தாழ்ந்து தலைகவிழ்ந்து இருளில் மூழ்கி, அடுப்பங்கரையிலேயே அடங்கி ஒடுங்கி முடங்கி, ஆமைபோலவும் ஊமைபோலவும் கோழை யுளத்தொடு உழன்றது. பெண்ணினம் சமுதாயத்தின் பாதியுறுப்பு. உடலில் ஒருபாதி நோக்காடுற்ருல் அவ் -வுடல் உடலாகாது ; வீழ்ந்துபடும். அதன் கிலேயே பெண்ணை வெறுத்த தமிழ்ச் சமுதாயத்துக்கு ஏற்பட்டது. இத்தகைய இழிநிலையைக் கண்டு முதலிற் கொதித்து எழுந்தவர் பாரதி; அவரைப் போலவே உளம் கொதித் துப் பாடியவர்களுள், ஒருவர் நம் கவிமணியவர்கள்.