பக்கம்:மறுமலர்ச்சிக் கவிஞர்கள்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 பட்டத்தையும் பெற்ருர் புரட்சிக் கவிஞர் செய்த புரட்சி என்ன ? - பிற கவிஞர்களின் கவிதைகளோடு பாரதிதாசனின் கவிதைகளை ஒப்பிடும்போதுதான் பாரதிதாசன் செய்த புரட்சி புலகுைம். பாரதிதாசனுக்கு முன்னும் பல கவிஞர்கள் வாழ்ந்தனர் : பாரதிதாசளுேடும் பல கவிஞர்கள் வாழுகின்றனர் ; உடன் வாழ்ந்தவரிலே சிலர் மறைந்தும் விட்டனர். இவர்களில் பாரதிதாசனத் தவிர்த்த ஏனையோரெல்லாம், தம் கவிதைகளை எதற்குப் பயன்படுத்தினர் ? எவற்றைப் பற்றிப் பாடினர் : அந்தக் காலத்திலே ஒருவன் கவிஞன் என்று பெயரெடுக்க வேண்டுமானல், அவன் கடவுளைப் பாடவேண்டும் ஏதாயினும் ஒரு கோயிலுக்குத் தலபுராணம் பாடித்தரல் வேண்டும் ; பாரதம், இராமா யணம் ஆகிய காதைகளின் கிளைக் கதைகளை விரித்துப் பாடவேண்டும் : பலவித சித்திரக் கவிகள் இயற்றல் வேண்டும் : தனிப்பட்ட செல்வர்களைப் புகழ்ந்து பாமாலைகள் தொடுத்தல் வேண்டும்; அப்படிப் பாடின. லும் மக்கள் எல்லோருக்கும் அஃதாவது குறைந்த தமிழ்க் கல்வியறிவு உடையவர்களுக்கு விளங்குமாறு பாடாமல், கற்றுவல்ல புலவர்க்கும் விளங்காத முறை யிலே பாடவேண்டும். இவைதாம் பாரதிதாசனுக்கு முன்னுள்ள புலவர் நிலையும், அவர் காலப் புலவர் நிலைமையும் ஆகும். --- பாரதிதாசன் வந்தார் : பாடினர். எப்படி ? யாரைப் பற்றி பாரதிதாசன் முதலிலே தான் வாழும் சமுதாயத் தைப் பார்க்கார். சாதிபேதம், சம்யப்புழு, மூட