பக்கம்:மறுமலர்ச்சிக் கவிஞர்கள்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 தமிழ்ச் சமுதாயத்திலே யார் மூட்டிய வினையோ பெண்".ண அடக்கி ஒடுக்கி ஆமையாக்கி ஊமையாக்கும் பக்கம் இடையிருட் காலத்தே வந்து புகுந்தது: பெண்ணே மண்ணுகச் சமுதாயம் கருதிற்று. இதைக் கண்டு கீழ்வரும் முறையில் புரட்சிப் பண் பாடினர் கவிஞர் | ' பெண்ணுக்குப் பேச்சுரிமை வேண்டாம் என்கின்றிரோ மண்ணுக்குங் கேடாய் மதித்திரோ பெண்ணினத்தை ? பெண்ணடிமை தீருமட்டும் பேசுந் திருநாட்டு ண்ணடிமை தீர்ந்து வருதல் முயற்கொம்பே. ஊமை என்று பெண்ணை உரைக்குமட்டும் உள்ளடங்கும் ஆமை நிலைமைதான் ஆடவர்க்கும் உண்டு ; புலன் அற்ற பேதையாய்ப் பெண்ணைச்செய் தாலந் நிலம் வளைந்த பைங்கூழ் நிலைமையும் அம்மட்டே." -- o கீழ்வரும் கவிதை பழுத்த கிழவனுக்கு வாழ்க்கைப் பட்ட எழிற் குமரி ஒருத்திப் பொருந்தாத் திருமணத் திட்டத்தை எதிர்த்து எழுப்பிய புரட்சிக் குரல் : ' மண்ணுய்ப்போக! மண்ணுய்ப்போக ! மனம் பொருந்தா மணம் மண்ணுய்ப் போக ! சமூகச் சட்டமே ! சமூக வழக்கமே! --. நீங்கள், மக்கள் அனைவரும் ஏங்கா திருக்க மண்ணுய்ப்போகவே !’ கீழ்வருவது தொழிலாளரின் சார்பிலே புரட்சிக் கவிஞர் எழுப்பிய புரட்சிக் குரல். ੋਂ པས་“ཁ་་་ செப்புதல் கேட்பீர்!-இந்தச் செகத் தொழிலாளர்கள் மிகப்பலர் ஆதலின்