பக்கம்:மறுமலர்ச்சிக் கவிஞர்கள்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 is சாதிமத பேதங்கள் முட வழக்கங்கள் தாங்கி நடைபெற்றுவரும் சண்டை யுலகிதனை ஊதையினில் துரும்புபோல் அலக்கழிப்போம் ; பின்னர் ஒழித்திடுவோம் ; புதியதோர் உலகு செய்வோம் ! பேதமிலா அறிவுடைய அவ்வுலகத்திற்குப் பேசு சுயமரியாதை உலகு எனப்பேர்வைப்போம் ! ஈதேகாண் சமூகமே, யாம் சொன்னவழியில் ஏறுநீ ஏறுநீ ! ஏறுநீ ! ஏறே !”

  • அண்டுபவர் அண்டாத வகைசெய்கின்ற

அநியாயம் செய்வதெது ? மதங்கள் அன்ருே ? கொண்டு விட்டோம் பேரறிவு, பெருஞ்செயல்கள் கொழித்து விட்டோம் என்றிங்கே கூறுவார்கள் பண்டொழிந்த புத்தன், இராமாநுசன், முகம்மது, கிறித்து-எனும் பலபேர் சொல்லிச் சண்டையிடும் அறியாமை அறிந்தா ரில்லை ! சமூகமே ஏறுநீ, எம் கொள்கைக்கே ! இதுகாறும் விளக்கியவற்ருல் புரட்சிக் கவிஞர் என்ற புரட்சிப்பட்டம் புதுவைப் பாரதிதாசன் அவர் களுக்கே பொருந்தும் என்பது மட்டுமன்று. வேறெக் கவிஞரும் அதனைப் பெறுவதற்குத் தகுதி யுடையவ ரல்லர் என்பதும் மலையிலக்காம். இலக்கிய நயம் கவிதைக்குரிய மூலப் பொருட்கள் பல : அவற் றுள்ளே, இயற்கை தலையாயது என்னலாம். எந்தக் கவிஞயிைனும் சரி, இயற்கையைப் பற்றிப் பாடாமல் போகான். ஏனெனில் கவிதைக்குரிய உணர்ச்சியைத் துாண்டவல்ல பேராற்றல் அழகுக்கே உண்டு.