பக்கம்:மறுமலர்ச்சிக் கவிஞர்கள்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

61 அழகு இயற்கையிலே காணப்படும். இயற்கையின் பற்பல கோலங்களையும் அழகையும் தனது இரு விழிகளா லும் அள்ளிப் பருகிய கவிஞனின் உள்ளத்திலே உணர்ச்சி வெள்ளம் போற் பெருக்குண்டு ஒடும். அதனல் கவிதைகள் பல பிறக்கும். அவ்வாறு இய |ற்கையழகைத் துய்ப்பதிலே புரட்சிக் கவிஞர் சிறந்தவர் ; வேட்கை மிக்கவர். இதனுல் அவர் இயற்கையைப் பற்றிப் பாடிய பாடல்கள் மிகப் பலவாம். அவற்றிலே ஒன்றிரண்டு வருவன : ஒளியும் குன்றும் ' அருவிகள் வயிரத்தொங்கல் ! அடர்கொடி பச்சைப் பட்டே ! குருவிகள், தங்கக் கட்டி ! குளிர்மலர் மணியின் குப்பை ! எருதின்மேற் பாயும் வேங்கை, நிலவுமேல் எழுந்த மின்னல் ச்ருகெலாம் ஒளிசேர் தங்கத் தகடுகள் பார டாநீ !’ அழகு காஜலயிளம் பரிதியிலே அவளைக் கண்டேன் ! கடற்பரப்பில் ஒளிப்புனலில் கண்டேன் அந்தச் சோலையிலே, மலர்களிலே, தளிர்கள் தம்மில் தொட்டஇடம் எலாம் கண்ணில் தட்டுப் பட்டாள் ! மா8லயிலே மேற்றிசையில் இளகுகின்ற மாணிக்கச் சுடரிலவள் இருந்தாள் ! ஆலஞ் காஜலயிலே திளைதோறும் கிளியின் கூட்டந் தனில் அந்த அழகென்பாள் கவிதை தந்தாள்.'