பக்கம்:மறுமலர்ச்சிக் கவிஞர்கள்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 உவமைச் சிறப்பு ' கவிதை எழுத வேண்டும் : கவிதைக்குச் சிறப்பு மிகத் தருவது உவமை. உவமைக்கு என்ன செய்வது ? பண்டைப் பாவலர்தம் பாக்களைத் துருவவேண்டும் : அங்குக் காணப்படும் உவமைகளை உருவ வேண்டும் ; தம் பாடலில் செருக வேண்டும். பார்ப்போர் ஆகா 1 என்ன உவமை எத்தகைய அழகு உவமை என்று வியந்து கூறுவர் : அவ்வளவிலே புகழ் ஒங்கும்'இவ்வாறு பிற்காலத்தே சில புலவர்கள் எண்ணி, அவ்வாறே எழுதி வெறும் புகழ் பெறலாயினர். ஆனல் புரட்சிக் கவிஞரோ, அவ்வாறு செய்திலர் : இயற்கையன்னையின் எழில் மாடத்துள் நுழைந்தார் : அங்கு இயற்கையில் காணும் பொருள்களையே "உவமை யாக்கிக் கவிதைகள் பல புனைந்தார். இதனால் அவர்தம் கவிதையிலே உயிர் ஓட்டமும் ஒளியும் பின்னிப் பிணைந்து காட்சியளிக்கலாயின. சில எடுத்துக் காட்டுக் கள் கீழே தரப்பட்டுள்ளன. - நீர்-இலை-நீர்த்துளிகள் ' கண்ணுடித் தரையின் மீது கண்கவர் பச்சைத் தட்டில் எண்ணுத ஒளிமுத்துக்சள் இறைந்ததுபோல் குளத்துத் தண்ணிரிலே படர்ந்த தாமரை இலையும், மேலே தெண்ணிரின் துளியும் கண்டேன் . * த பைப்.ே ாடு வீடு சேர்ந்தேன்.” +