பக்கம்:மறுமலர்ச்சிக் கவிஞர்கள்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 அதுமட்டுமன்று : பாரதிதாசனின் அடிச்சுவட் -டைப் பின்பற்றித் தோன்றிய இளங் கவிஞர்கள் இன்று மிகப் பலர். அவர்களுள்ளே சிறந்தவர்கள் கவிஞர்க ளான வாணிதாசன், சுரதா, கண்ணதாசன், முடியரசன். கதி. சுந்தரம் என்பவராவர். பாரதிதாசனைப் பின்பற்றி இன்னும் எத்தனையோ சிறுகவிஞர்கள் கவிதை புனைந்து வருகின்றனர். சுருங்க உரைப்பின் இப்பொழுது தமிழ கத்தில் பாரதிதாசனின் கவிஞர் பரம்பரை ஒன்று வாழ்க் தும்வளர்ந்தும் வருகிறது. இத்தகைய பெருமை வேறெக் கவிஞருக்கும் இல்லை என்னலாம். தமிழ்க் கவிதை வரலாற்றிலே ஒரு புரட்சிப் பாதை ஒன்றைத் தொடங்கி வைத்து அதிலே பல கவிஞர்களுக்குத் தலைமை தாங்கி வெற்றி நடைபோட்டு வாழும் புரட்சிக் கவிஞர் பாரதிதாசனுக்குத் தமிழிலக்கிய வரலாற்றிலே ஒரு பெரும் இடம் உண்டு. அந்த இடம் பொன்னெழுத்துக் களால் பொறிக்கப்பட வேண்டிய இடமாகும்.