பக்கம்:மறுமலர்ச்சிக் கவிஞர்கள்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. நாமக்கல் கவிஞர் முன்னுரை தமிழகத்துக்கு விடுதலைப் போராட்டத்தால் விளந்த நன்மைகள் பல. விடுதலைப் போராட்டத்துக்குத் தமிழகம் தந்த கொடைகள் பல : வாரி வழங்கிய வீரர்கள் பலர். அவர்களிலே அரசியல் அறிஞர் உளர் : பேராசிரியர் உளர் : தமிழறிஞர் உளர் : கவிஞர் உளர். அத்தகைய கவிஞர்களிலே ஒருவர் தாம் நாமக்கல் கவிஞர். மக்கல் கவிஞர் அவர்கள் விடுதலைப் போராட்டத்துக்குத் தன் கவிதைகளே நன்கு பயன்படுத்தினர். அயலவர் ஆட்சி யிலே உரிமை இழந்து, உடைமை இழந்து. செல் வாக்கை இழந்து, கோழைகளாகவும் மோழைகளாகவும் நாட்டுமக்கள் வாழ்ந்தனர் : கிலே தாழ்ந்து தலைகவிழ்ந்து உலவினர் ; ஏனைய நாட்டுமக்கள் எல்லோரும் வீறு கொண்டு பெருமையோடு வாழ இந்நாட்டு மக்கள் 'மிட்டும் தம்பண்டைப் பெருமை இழந்து பினம்போல வாழ்ந்தனர். இவ்வாறு உணர்ச்சியற்ற மக்கள் நாமக் கல்லார் தம் விடுதலைச் சுடர்விடும் கவிதைகளைப் படித்தனர் : படிக்கக் கேட்டனர். அவர்தம் நாடி நரம்புகள் எங்கும் நாமக்கல்லார் தம் கவின்தத் தேனிலே --- குழைத்துக் கொடுத்த விடுதலே உணர்வாம் மருந்து சென்று பரவியது. கூனன் செங்கோலென நிமிர்ந்தான் : கோழை வீரகைமாறினன் : பூனையென இருந்த மக்கள் புலியென மர்மினர். அவ்வளவகான் : காய்த்திரு நாட் F. o