பக்கம்:மறுமலர்ச்சிக் கவிஞர்கள்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 டின் அடிமைத் தளையை ஒடித்தெறிய உணர்வு கொண்டனர் : கடலெனக் கவிதை பாடி விரைந்தனர் : கண்ணிரும் செங்ருேம் கொட்டினர். முடிவில் நாடு விடுதலை பெற்றது. தங்களுக்கு விடுதலை யுணர்வு ஊட்டிய கவிதைகளை மாரியெனப் பொழிந்த நாமக்கல் கவிஞரை மக்கள் மனமாறப் போற்றினர் : உச்சிமீது ஏற்றி மெச்சினர். அரசவைக் கவிஞராகவும் ஆக்கி அகமும் முகமும் மகிழலாயினர். இத்தகைய சிறப்பும் சீரும் பேரும் செழிப்பும் கொண்டவராய் இன்றும் நம் மிடையே உலவும் கவிஞர் பெருந்தகையாம் நாமக் கல்லார் அவர்களைப் பற்றியது இக்கட்டுரை. கவிஞர்தம் வாழ்க்கை வரலாறு கவிஞர் பிறந்த ஊர் மோகனூர். அவ்வூர் சேல மாவட்டத்தைச் சேர்ந்ததாகும். கவிஞரைப் பெற்ற பெருமை வேங்கடராமன், அம்மணி அம்மையார் ஆகியோரைச் சாரும். கவிஞர் பிறந்தது 1888-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் பத்தொன்பதாம் நாளாகும். விஞர் தம் பெற்ருேருக்கு எட்டாவது பிள்ளையாகும். பிறந்த கவிஞர் பள்ளிப்பருவம் அடைந்தார். கல்வி. தொடங்கும் நாள் வந்தது. கவிஞர் வீட்டிலே உற்ருரும் மகிழ்ச்சி கூத்தாடிய து. வீடே விழாக் கோலம் பூண்டிருந்தது. அந்த நல்ல நாளிலே பழனி ஆசிரியர். சண்முகளுர் கவிஞருக்குக் கல்வி கற்பிக்கத் தொடங் திங்கள் சில உருண்டோடின. கவிஞர். நாமக்கல் :ெ அங்கள்ள நம்மாம்வார்.பள்ளியிற் சேர்ந்தார்.