பக்கம்:மறுமலர்ச்சிக் கவிஞர்கள்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 முதல் வகுப்பிலே சேர்ந்தார் ; கல்லூரிப் படிப்பிலே ஆர்வம் மிகக் கொண்டார். அதனல் கவிஞரே எல்லாப் பாடங்களிலும் முன்னணியில் நின்ருர். என்ருலும் கவிஞரால் கல்லூரிப் படிப்பை முடிக்க முடியவில்லை. இரண்டாவது ஆண்டிலே காதுவலி கவிஞரை வாட்டி யது. அறுவைச் சிகிச்சை நடைபெற்றது. காது வலி நின்றது. ஆனல் வலிநின்றபின் காதே செவிடுபட்டது. இங்கிலேயில் கவிஞர் மணமகளுஞர். மணமகளாகும் பேறு முத்தம்மாள் என்னும் அம்மையாருக்குக் கிடைத்தது. கவிஞருக்குத் தற்போது வாழ்க்கைப் பொறுப்பு வந்துவிட்டது. வாழ்க்கையை நடாத்தப் பொருள் வேண்டுமல்லவா ? எனவே தந்தையார் தன்மகன் ஏதாவது வேலை செய்து பொருள் ஈட்ட வேண்டும் என்று எண்ணினர் எண்ணியாங்கு முயன்ருர் : முயற்சியின் பயனுகச் சென்னைத் தலைமைக் காவலதிகாரி கவிஞருக்குத் தொடக்கத்திலே காவல் தலைவர் பதவி. தருவதாக வாக்களித்தார். கவிஞரின் தந்தைக்கு மகிழ்ச்சி தாங்க முடியவில்லை. - п. ஆனல் கவிஞருக்குத் தந்தை தேடிய வேலை அறவே பிடிக்கவில்லை. செவிட்டுக் காது, அடிமையை வெறுக் கும் உள்ளம் ஆகிய இரண்டும் சேர்ந்து கவிஞருக்கு வேலையிலே வெறுப்பை ஏற்படுத்தின. வேலைக்காகச் சென்னை செல்ல வேண்டிய நாள் நெருங்க நெருங்கக் கவிஞருக்கு வருத்தம் மிகுந்தது ; தந்தைக்கு மகிழ்ச்சி மிகுந்தது. முடிவில் சென்னை செல்வதற்கு முன்னாள் கந்தைக்குத் தெரியாமல் தமக்கை ஊராம் கரூருக்கச் சன்றுவிட்டார்.