பக்கம்:மறுமலர்ச்சிக் கவிஞர்கள்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 | lதது. கவிஞரின் படம் காட்சிக்கு வைக்கப்பட்டது. கண் வர் கண்கள் வியப்பிலே மிதந்தன. தங்கப் பதக்கம் பரிசாகத் தரப்பட்டது. நாடே கவிஞரைப் புகழ்ந்தது. மறுமுறை திருச்சி பிலே கடந்த மாநாடு ஒன்றிலேயும் கவிஞர் படங்கள் | lசு பல பெற்றன. இவ்வாறு ஒவியப்புலமை கவிஞருக்கு அளித்த பரிசுகள் மிகப்பலவாகும். வங்காளப் பிரிவினை ஏற்பட்ட காலத்தே நாடெங்கும் கிளர்ச்சி பல நடைபெற்றன. கோகலே, திலகர் போன்ருேளின் உரைகள் விடுதலைத் தீக்கு விறகாக அமைந்தன. அந்தத் தீயிலே கவிஞரும் வீழ்" தார். அவ்வாறு வீழ்ந்தவர் பிறகு எழவில்லை. விடுதலே யுணர்வு கவிஞரை வெறியராக்கியது. கவிஞர் ஊர் பல சென்ருர் , வீரப் பேச்சுக்களே நிகழ்த்தினர். மக்கள் பலாப்பழத்தை ஈக்கள் மொய்ப்பது போலக் கவிஞரை மொய்த்தனர். விடுதலைப் போரை நடத்தும் இயக்கத் துக்குப் பலதடவை பொருள்களைத் திரட்டித் தந்தார். அவ்வப்போது நடைபெற்ற அரசியல் மாநாடுகளுக்குச் செயலாளராகவும், தலைவராகவும் பணியாற்றியுள்ளார். இங்கிலையில் விடுதலே இயக்கம் பிளவுண்டது. திலகர் கட்சி, கோகலே கட்சி என்ற இரு கட்சிகள் ஏற்பட் டன. கவிஞர் முன்னவர் கட்சியை ஆதரித்தார். அதல்ை பின்னவர் கட்சியைச் சேர்ந்த காந்தியைக் கவிஞருக்குப் பிடிக்கவில்லை. ஆனல் பின்னர் காந்தியின் உண்மை வாக்கிலும் தூய போக்கிலும், கவிஞர் மனம் பறிகொடுத்தார்: காந்திப் பித்தரானர். பிற்கு கல்கத்தாவில் நடைபெற்ற மாநாட்டுக்குச் சென்ருர். அங்குக்