பக்கம்:மறுமலர்ச்சிக் கவிஞர்கள்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிஞர் யாத்த நூல்கள் நாமக்கல் கவிஞர் தனது பாமாலைகளால் தமிழன்னை யைப் ட ல ப ட ப் போற்றியுள்ளார். தமிழகக் கவிஞர்களிலே, அஃதாவது இருபதாம் நூற்ருண்டுத் தமிழ்க் கவிஞர்களிலே புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களுக்கு அடுத்தபடியாக அதிகமான தமிழ் நூல்கள் எழுதிய பெருமை நாமக்கல் கவிஞருக்கு உண்டு. ஆனல் தமிழகக் கவிஞர்களிலே ஏனைய கவிஞர்களுக்கு இல்லாத ஒரு பெருமை, சிறப்பு இக் கவிஞருக்குண்டு. அதுஎது? ஏனைய கவிஞர்கள் எல்லோரும் கவிதை நூல்களைத் தான் நிறைய எழுதினரே தவிர உரைநடை நூல்களை அவ்வளவாக எழுதவில்லை. பாரதிதாசனரைப் பொறுத்த அளவிலே, ஓர் முப்பது பக்கமே உரைநடை எழுதி பிருக்கிருர் தேசிக விநாயகம் பிள்ளை யவர்கள் உரை நடை நூல் ஒன்றே எழுதியுள்ளார். ஆனல் நாமக்கல் கவிஞர் உரைநடையிலே பெரும்பெரும் நூல்கள் எழுதி புள்ளார். அவைகளிலே இரண்டு நூல்கள் மட்டும் மிகச் சிறந்த நூல்களாகும். அவ்விரண்டு நூல்களில் ஒன்று திர்ைப்படமாக்கப்பட்டு வெற்றியோடு ஒ டி ய து நாமறிந்த தொன்றே. தமிழன் இதயம், கீர்த்தனைகள், தமிழ் மொழியும் தமிழரசும், தாயார் கொடுத்த தனம், தமிழ்த்தேன். சங்கொலி, கவிஞன் குரல், இசைத்தமிழ். அவளும் அவனும், இலக்கிய இன்பம், காந்தி அஞ்சலி என்கதை, மலைக்கள்ளன். காந்திய அரசியல், வள்ளுவர் உள்ளம், திருவள்ளுவர் திடுக்கிடுவார், ஆரியராவது திராவிடராவது, பிரார்த்தனை, அரவணை சுந்தரம், சங்கிலிக் கறுப்பன் முதலியவை தமிழ்ப் பெருமக்களுக்குக் கவிஞர் அளித்த பரிசுகளாம். இன்னும் பல பரிசுகளையும் கவிஞர் மணிப்பார் என நாம் எதிர்பார்ப்பின் அது பிழையன்ரும்