பக்கம்:மறுமலர்ச்சிக் கவிஞர்கள்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74. கள் உண்டு. அவற்றுள் ஒன்று ' எளிய சொற்கள், எளிய நடை, மக்களை எளிதிலே கவரவல்ல இனிய ஒலி நயம், ஆகியவற்றின் அடிப்படையிலே பல கவிதை நூல்கள். உருவாக்கப்படல் வேண்டும் , அவ்வாறு செய்து தருவோன் தமிழ் மொழிக்குப் புத்துயிர் நல்கிய வித்தகன் ஆவான் ' என்பதாகும். பாரதியார் அவ்வேட் கையின் காரணமாகவே குயில் பாடினர் பாஞ்சாலி சபதம்' செய்தார் : கண்ணன் பாட்டுப் பாடினர். பாரதியார் கொண்ட இதே வேட்கையை நாமக்கல் கவிஞரும் கொண்டார்; அதுமட்டுமன்று அந்த வேட் கையை வினைப்படுத்தவும் வேண்டும் என எண்ணினர். வேட்கை, வினைப்படுத்தும் எண்ணம் ஆகிய இரண்டி அனுக்கும் பிறந்த செல்வக் குழந்தையே அவனும் அவளும் ' என்ற கவிதை நெடுங்கதை யாகும். இந்நூல் படிக்கச் சுவை மிக்கதாகும் கதைப் போக்கு நன்கு அமைந்துள்ளது. பா நடை ஓரளவுக்குத் தங்கு தண்டயின்றிச் செல்லுகிறது. எல்லோரும் படித்துச் சுவைக்க வேண்டியதொரு சீரிய நூல் இது என்பதில் ஐயமில்லை. மலேக்கள்ளன் என்பது உரைநடையில் அம்ைந்த ஒர் அழகிய நெடுங்கதையாகும். தமிழகக் கவிஞர் களிலேயே இவ்வளவு அழகிய ஒரு நெடுங்கதை (நாவல்) நூல் எழுதியவர் நாமக்கல் கவிஞ்ரே. நூலைப் படிக்க எடுத்துவிட்டால் உணவை மறப்போம்: உறக்கத்தைத் துறப்போம் ; இடி, விழுந்தாலும் அசை யோம். நூலை முடித்தால் ஒழிய நாம் எழுந்திரோம்.