பக்கம்:மறுமலர்ச்சிக் கவிஞர்கள்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

75 அந்த அளவுக்கு மலேக்கள்ளனின் கதைப் போக்கு அமைந்துள்ளது. கதைப்போக்கு மிகவும் சுவையுள்ளது. ஒரு நிகழ்ச்சி முடிந்த பின்னர் அடுத்து நடைபெறுவது எது என்பதை அறியப் பெரிதும் நாம் ஆசை கொள் வோம். நிகழ்ச்சிகள் மிகவும் அழகாகப் பின்னிப் பிணைந்து செல்லுகின்றன. ஒரு நிகழ்ச்சியின் முடி விலேயே மற்ருெரு நிகழ்ச்சிக்குரிய விதை விதைக்கப் பட்டுள்ளது. அது மிகவும் பாராட்டத்தக்கது. மலைக்கள்ளனின் அருமையை அறிந்த திரைப் || -- உலகத்தார் அதைத் திரையிட்டு நாட்டு மக்கள் அனே வரும் கண்டு களிக்க எண்ணினர். அதற்குத் தரைக் கதை வசனம் கலைஞர். மு. கருணுகிதி அவர்கள் எழுதித் தந்தார். புரட்சி நடிகர் நடித்தார். படம் வெளிவந்து பல்லாயிரம் மக்களின் பாராட்டுதலைப் பெற்றது. மேலே நாட்டிலே, குறிப்பாக ஆங்கில நாட்டிலே கவிஞர்களாக விளங்கியவர்களே இலக்கியத் திறனுய் வாளர்களாகவும் விளங்கியதுண்டு. அவ்வாறு விளங்கிய வர்களிலே குறிப்பிடத்தக்க சிறப்புடையவர்கள் -காலரிட்ச், மாத்யூ அர்னல்டு. வேர்ட்ச்(வெர்த்து எனபவராவா. அவர்களைப் போன்ற திறனுய்வுக் கவிஞர்கள் தமிழகத்திலே நாம்க்கல் கவிஞரைத் தவிர வேறுயாரும் இல்லை என்று கூறிவிடலாம். நாமக்கல் கவிஞரின் திறனாய்வுத் திறத்தை வெளிப்படுத்தும் நூலே "இலக்கிய இன்பம்' என்பதாகும்.