பக்கம்:மறுமலர்ச்சிக் கவிஞர்கள்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 இந்நூல் கம்பன் கவித்திறத்தைக் கவிஞர் சுவைத்த முறையைக் காட்டும் நூலாகும். இதன் மூலம் கவிஞருக் குப் பாட மட்டுமன்று, பிறர் பாடிய பாக்களைச் சுவைக்கவும் முடியும், சுவைத்த முறையை உரை நடையில் பிறர்க்கு எழுதிக் காட்டவும் முடியும் என்பதை நாமக்கல் கவிஞர் அவர்கள் தெளிவாகக் காட்டியுள்ளார்கள். திறய்ைவுக்கலை வரலாற்றில் இங் நூல் ஒர் சீரிய இடத்தைப் பெறும் என்பதில் ஐயமில்லை. கவிஞரவர்கள் அண்மையிலே திருக்குறளுக்கு ஒரு புத்துரை எழுதி வெளியிட்டுள்ளார். அதனைப் பல பேரறிஞர்களும் புகழ்ந்துள்ளனர். அவ்வுரைமூலம் கவிஞரவர்கள் திருக்குறளிடத்திலே கொண்ட ஈடுபாடும். அதிலே அவர்கள் அடைந்த புலமையும் நன்கு விளங்கும். இலக்கிய நயம் பாட்டுக்களுக்கு உயிரும் ஒட்டமும் அளிக்க வல்லது ஒலியாகும் (Rhythm). உரைநடையினின்றும் பாட்டைப் பிரித்துக் காட்ட வல்லதும் இந்த ஒலியே. பாட்டின் உயிர்போல விளங்குவதும் இந்த ஒலியே. பாட்டின் பொருள் ஒருவனுக்குத் தெரியாமல் இருக்க லாம். அந்தப் பாட்டின் கருத்து. கேட்போர்க்கு விளங் காமல் போகலாம். ஆனல் அந்தப் பாட்டில் என்ன உணர்ச்சி யடங்கியுள்ளது என்பதைப் பாட்டைப் படிப்போரும் கேட்போரும் தெள்ளத் தெளிய உணர்ந்து கொள்ள முடியும். அவ்வாறு கற்ருரும் கல்லாதாரும் பாட்டில் தேக்கி வைக்கப்பட்டுள்ள உணர்ச்சியை நன்கு -உணர்ந்துகொள்ள வைப்பது. உண்ருமாறு செய்வது