பக்கம்:மறுமலர்ச்சிக் கவிஞர்கள்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

77 பாட்டிலே ஊடுருவி நிற்கும் ஒலியமைப்பே யாகும். ஒலியமைப்புக்கு அந்த ஆற்றல் அமைந்து கிடப்பது அறிந்து இன்புறுதற்குரியதாகும். உறங்காது ஒலமிடும் குழந்தையை அப்படியே ஆழ்ந்து உறங்கச் செய்வது இந்த ஒலியே. போர்க்களத்திலே விரமூட்டுவதும் இந்த ஒலியே; கலிங்கத்துப் பரணியிலே இந்த ஒலியின் ஆற்றலையும் அருமையையும் நன்கு கண்டு களிக்கலாம். இத்தகைய ஒலிக்குப் பொதுமக்கள் எளிதிலே வயப்படுவர். அவர்களை வயப்படுத்தி விடுதலேப் போராட்டத்திலே ஈடுபடுத்த எண்ணிய நாமக்கல் கவிஞரவர்கள் அவர்கள் உள்ளத்தை எளிதிலே கவர்ந்து இயக்கவல்ல எளிய சந்தங்களை அமைத்துப் பாடல்கள் L JGU இயற்றினர். நாமக்கல்லூர் பாடல்களிலே ஓசை ர் சிறப்பே குறிப்பிடத்தக்கது. 'தமிழன் என்ருெரு இனமுண்டு தனியே அவற்கொரு குணமுண்டு அமிழ்தம் அவனுடைய மொழியாகும் அன்பே அவனுடைய வழியாகும்.” படித்துப் பழகாத பாமரருக்கும் பாடிப் பருகஅதில் சேம மிருக்கும் ஒடித்துப் பொருள்பிரிக்கும் சந்திகளில்லே ஊன்றிப் பதங்கூட்டும் பந்தனமல்ல.”

  • மக்களை வதைத்திடும்

மனைவியை உதைத்திடும் துக்கமான கள்ளினைத் தொலைப்பதே துரைத்தனம்.'