பக்கம்:மறைந்து கிடக்கும் மனித சக்தி.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14. நீச்சல் - மிகவும் நல்ல உடற்பயிற்சி


நீச்சல் என்றவுடன் நம்மவர்களுக்கு நினைவில் வருவது ஆறு, குளம், ஏரி, கடல் போன்ற நீர்ப்பரப்புக்கள் தாம் மேல்நாட்டவர்க்கோ நீச்சல் குளம்; கடலாடல்.


நகரத்தில் வாழ்பவர்களுக்கு மேலே கூறியவைகளில் நீந்தும் வாய்ப்பு கிடைப்பதில்லை. அவர்கள் நீச்சல் குளத்


H -


o


தைத் தான் நம்பிக் கிடக்க வேண்டியிருக்கிறது.


நம் நாட்டிலோ நீச்சல் குளங்கள் அதிகமாக இல்லை. ஒரு பெரிய நகரத்தில் 10 நீச்சல் குளங்கள் இருந்தால், அதுவே பெரிய விஷயமாக இருக்கிறது. “


உடற்பயிற்சிகளில் நீச்சல் பயிற்சி ஒரு நிறைவான, முழுமையான பயிற்சியாகவே விளங்குகிறது.


கிராமப்புற மக்கள் நீந்தும் பயிற்சியைப் பெற அதிகம் வாய்ப்பிருப்பதால், அவர்களை அறியாமலேயே அவர்கள். ஆற்றல் மிக்கவர்களாக இருந்து வருகிறார்கள்.