பக்கம்:மறைந்து கிடக்கும் மனித சக்தி.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16. ஆசியப் போட்டிகள் -- ஓர் ஆய்வு:


இந்தியாவில் ஆசியப் போட்டி


பரபரப்பாக பத்தாவது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் இந்தியாவில் நடந்து முடிந்து போய் விட்டன. பத்திரிக்கைகள் எழுதி ஒய்ந்தன. வானொலியோ பேசித் தீர்த்தது. தொலைக் காட்சியோ துருவித் துருவி நிகழ்ச்சி களைக் காட்டி விட்டு, நம்மை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.


காட்டிய நிகழ்ச்சிகளைக் கண்ட போது, காட்டாற்று வெள்ளமாக உணர்ச்சிகளும் உந்துதல்களும் போட்டியாளர் களிடையேயும், பார்வையாளர்களிடையேயும் புடைத்துக் கொண்டு நின்றதை நம்மால் அறிய முடிந்தது.


எவ்வளவோ சிறப்புக்கள் இருந்தாலும், இந்தியாவின் இழப்புக்கள் அங்கே துல்லியமாகத் தெரிந்தன.


மக்கள் தொகையிலே மாபெரும் இடத்தைப் பெற்று, *-லகத்தை உன்னிப்பாக நோக்க வைத்திருக்கும் இந்தியா,