பக்கம்:மறைந்து கிடக்கும் மனித சக்தி.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

. I 36 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


போட்டி தொடங்கிய முதல் பத்து நாட்களில், தங்கம் எதுவும் இல்லாமல் முழு முட்டையாக இருந்தது எல்லோரது கவனத்தையும் ஈர்த்தது.


தோற்கிற நாடா இது?


இந்தியர்களின் இதயங்களிலே அவமானச் சுமை. உலக நாடுகளுக்கிடையே ஏளனச் சுவை. இப்படியும் ஒரு நாடா என்று கேலி பேசுகிற அளவுக்கு இந்தியாவின் செயல்பாடுபோட்டியில் கீழ்மை


எப்பொழுது ஆசியப் போட்டிகள் நடை பெற்றாலும் நமது இந்தியா ஒரு 5 வது இடத்தைத் தானே பெற முடிகிறது?


எங்கேயோ தெரியாத ஒரிடத்தில் இருந்த தென் கொரியா, பத்தாவது ஆசியப் போட்டியை நடத்தப் பொறுப்பேற்க முன் வந்தது வியப்பாக இல்லை.


அந்த நாடு, ஆவேசமாக முன்னெழுந்து, ஆக்ரோஷ மாக பயிற்சிகள் செய்து, அனைத்துப் போட்டிகளிலும் போராடி, எப்பொழுதும் வெற்றிகளைக் குவித்த ஜப்பானைப் பின்னுக்குத்தள்ளி, முன்னணியில் நிற்கும் சீனாவையே முறியடிக்கின்ற அளவுக்குத் தங்கப் பதக்கங் களை வென்ற தென்கொரியா தான் நம்மை வியப்பில் ஆழ்த்தியது.


தென்கொரியா வீரர்கள், வீராங்கனைகள் காட்டி சுறுசுறுப்பு, பரபரப்பு: நெருப்பாக இருந்து அவர்கள் போட்டியிட்ட வேகம். இன்னும் நமது கண்முன்னாலேயே நிற்கிறது.