பக்கம்:மறைந்து கிடக்கும் மனித சக்தி.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 54 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


அடுத்த கட்டத்தில் வாழ்ந்த மனிதனோ, அஞ்சி ஒடிய கோழைத்தனத்தை விட்டு விட்டு, ஆவேசத்துடன் எதிர்த் தான். பொங்கி வந்த வேகத்துடன் மிருகங்களைக் கொன்றான். அதன் தசைகளைத் தின்றான். காய்கறிகள் தின்ற வாய்க்கு, மாமிச உணவு ருசியாக இருந்தது. அத னால், வேட்டையாடும் விளையாட்டு மனித இனத்தில் ஆரம்பித்து விட்டது.


அடர்ந்த காடுகளிடையே அலைந்து திரிந்த மனிதக் கூட்டம், ஒரிடத்தில் இருந்து தங்கி வாழ முற்பட்டது. அதனால் அவர்களுக்கு ஒய்வு ஏற்பட்டது. அந்த ஒய்வு நேரத்தை உல்லாசமாக்கவும், வாழ்க்கையில் தற்காப்புக் கலையை கற்றுக் கொள்ளவும், மனிதர்கள் விளையாட் டைத் தேடினார்கள்.


ஒட்ட மும் ஆட்டமும் அவர்களுக்கு உதவின. வெறுங்கை வீச்சுகள் அவர்களுக்கு வெறுப்பைத் தந்தன. ஆகவே, அவர்களுக்கு விளையாட ஏதாவது உதவிப் பொருட்கள் தேவைப்பட்டன.


பழங்களும் பங்துகளும்


  • மரத்திலிருந்து விழுந்த பழங்கள் உருண்டோடியதைக் கண்ட மனிதர்கள், முதலில் மகிழ்ந்தார்கள். பிறகு வியத் தார்கள். மரத்துப் பழங்களை ஏறிப் பறித்து உருட்டி ஆடினார்கள்.


மண் தரையிலே உருண்டோடிய பழங்கள், விரைவிலே வீணா கிப் போயின. அதனால், பழங்களை விட்டு விட்டு. பழங்களில் உள்ள கொட்டைகளைப் பயன்படுத்தினார்கள்: அதற்குப் பிறகு உருண்டையான கூழாங்கற்கள் அவா களுக்கு விளையாட உதவின.