பக்கம்:மறைந்து கிடக்கும் மனித சக்தி.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 60 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


மொரதாபாத் போன்ற நகரங்களில் குடியேறிவிட்டனர். ஆகவே இந்த நான்கு நகரங்சளும் விளையாட்டுப் பொருட் களை உற்பத்தி செய்து இந்தியா முழுவதற்கும் அனுப்பு கின்ற தலைமை இடங்களாக மாறிவிட்டன. அதாவது 85 சதவிகிதம் விளையாட்டுப் பொருட்கள் இங்கேதான் விளை கிறது. அவர்களிடமிருந்து வாங்கி விற்கின்ற சில்லறை வியாபாரிகளுக்கு 40 முதல் 100 சதவிகிதம் வரை லாபம் கிடைக்கின்ற வகையில் பொருட்கள் விற்கப்படுகின்றன. இவர்களிடமிருந்து வாங்குகின்ற நிறுவனங்கள், ஸ்தாபனங் கள் பல. அதிசயமான தள்ளுபடியை எதிர் பார்ப்பதால், விளையாட்டுப் பெருட்களின் விலை மேலும் உச்சக் கட்டத்தில் ஏறிப் போய் நிற்கின்றன.


அதனால், விளையாட விரும்பும் பொதுமக்கள் பலருக்கு, தங்களுக்கு என்று சொந்தமாக வாங்கி வைத்துக் கொள்ளும் வசதிகள் இல்லாமல் போய் விடுகிறது.


வேறு பல நகரங்களில் இது போன்று விளையாட்டுப் பொருட்கள் தயாரிக்கும் கம்பெனிகளை அமைத்து உற்பத்தி செய்து, சகாய விலையில்தரக் கூடிய இலட்சியத்துடன் பலர் முயற்சி செய்தார்கள். அவற்றை உற்பத்தி செய்யும் பொழுது ஏற்பட்ட கஷ்டங்களை விட, விற்பனை செய்யும் நேரத்தில்தான் அதிகமாக ஏற்பட்டது. Marketing Problem என்பார்களே அந்த பெரும் பிரச்சினையில், புதிய நிறுவனங்கள் உயிர்பிழைக்க முடியாமற் செத்துப் போயின.


தேவைகள் அதிகமாக இருக்கும் பொழுது, உற்பத்தி குறைந்து இருந்தால் விலைகள் அதிசமாகிவிடும். குறிப்பிட்ஒரு சிலர் கை வசம் உற்பத்தி வாய்ப்பு இருந்தால், விலை வாசிகள் (மேலும் மேலும் உயரும் என்பதை நாம் எல்லோரும் அறிந்துதானிருக்கிறோம். அடிக்கடி விலைகள் உயர்வதும் இந்த அடிப்படையில் தான்.