பக்கம்:மறைந்து கிடக்கும் மனித சக்தி.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 64 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா,


வளைகோல் பந்தாட்டத்தில் பல ஆண்டுகள் தலைமை இடத்தைப் பெற்றிருந்த காலம் மாறி, இன்று அரை இறுதிப் போட்டிக்குக் கூடப் போக முடியாத குறையும். நமக்கு உண்டு.


மக்கள் தொகைப் பெருக்கத்தினால் மட்டுமே, விளை யாட்டுக்களில் வெற்றி பெற்று விட முடியாது. திறமை வாய்ந்த மக்களின் எண்ணிக்கைப் பெருகினால்தான் உண்டு.


மக்களும் தலைவர்களும்


இந்தியா தோற்பதைத் தான் எல்லோரும் ஏளன மாகவும் இழிவாகவும் பேசி மகிழ்கின்றார்களே ஒழிய, என்ன செய்ய வேண்டும் என்று யாரும் யோசனை கூறுவதில்லை.


விளையாட்டுத் துறையின் மேன்மைக்குத் தலைமை தாங்கி நடத்துபவர்கள் கூட, போட்டிகளுக்கு முன்பாக பெருத்த நம்பிக்கை ஏற்படும் வண்ணம் பேசுவார்கள். போட்டிகளில் தோற்றுப் போனதும், மற்றவர்கள் மீது குற்றத்தைச் சுமத்தி விட்டு, தங்களுக்கும் அதற்கும் சம்மந்தமே இல்லாதது போல பேசி நழுவிக் கொள்வார்கள்.


சாமர்த்தியம் என்பது பிறர்மேல் பொறுப்பைச் சுமத்தித் தப்பித்துக் கொள்வது ஒன்றே, இன்று எல்லோரிடமு’ கை வந்தக் கலையாகப் போயிற்று.


நாம் சற்று மாறுபட்ட நிலையில் நம்மைப் பற்றி ஆராய்வோம். அது வெற்றி தராவிட்டாலும், விழாமலாவிசி தடுக்கும் என்ற நம்பிக்கையுடன் நாம் தொடர்வோம்.


போரின் போது எதிரிகளின் பெருக்கத்தையும், . ஆற்றலையும் முதலில் ஆராய்ந்து, அதற்கேற்ப செயல்'