பக்கம்:மறைந்து கிடக்கும் மனித சக்தி.pdf/314

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 I-2 டாக்டர் எஸ், நவராஜ் செல்லையா,


ஆட்டக்காரர்கள் அணிவதில் ஒழுங்கு:


விதிகளுக்குக் கட்டுப்படும் மரபு விட்டுக் கொடுத்து அமைதி காக்கும் பேராண்மை; தனக்கு குத்தகமாக இருந்தாலும் தாங்கிக் கொண்டு விதிகளைப் பின்பற்றுகிற வேகம்; குழு மேல் வைத்திருக்கின்ற விசுவாசம், நாள் முழுதும் ஆடுகிற் உடல் வவிமை, நீடித்துழைக்கும் ஆற்றல் இவையெல்லாம் அதிகமாக விளையாட்டு வீரர்கள்பெற்றுக் கொண்டிருக்கிற போனஸ் திறமையாகும். பிறரைப் பாராட்டி ரசிக்கின்ற மனமும், பழக்கமும் இயல்பாக, நிறையவே இங்கு வளர்க்கப் படுகின்றன.


‘கிரிக்கெட் தேவை தானா !


நாள் முழுதும் ஆடப்படுகிறது; பல நாட்கள் ஆடப்படு கின்றது. என்ற ஒரு குற்றச்சாட்டைத் தவிர, கிரிக்கெட் ஆட்டம் மற்ற எல்லா நிலையிலும் ஏற்றுக் கொள்ளப்படுவ தாகவே இருக்கிறது.


மக்களை மகிழ்ச்சிப் படுத்த வேண்டும்; நாட்டின் சட்ட திட்டங்களை மதித்து நடக்கிற வகையில் மக்கள் பக்குவப் படுத்த வேண்டும். நேரத்தின் மதிப்பை உணர்ந்து, எந்த செயலையும் நேரத்தோடு ஆரம்பித்திட வேண்டும். மற்றவர்களும் சமுதாயத்தின் ஒரு பகுதியே என்ற பெருந் தன்மையுடன், நண்பர்களை மட்டுமே மதிக்காமல் மாற்றார்களையும் மதிக்கக் கற்றுத் தர வேண்டும்.


சமத்துவம், சகோரத்துவம், சுதந்திரத்துவம் போன்ற கொள்கைகளைப் புரிந்து கொண்டு பண்போடு நடந்து கொள்ள வேண்டும் என்கிற எல்லா விஷயங்களிலும்,


கிரிக்கெட் ஆட்டம் மக்களைத் தயார் படுத்துகிறது.


சிறந்த வீரனாக மட்டுமல்ல, சிறந்த மனிதனாக, சீர்மையும் நேர்மையும் தூய்மையான இலட்சியமும்,