பக்கம்:மறைந்து கிடக்கும் மனித சக்தி.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

H L. Fo H 1. - இடக்கு * l J. F.


உலகமெங்கிலும் இது நடைமுறையாகி விட்டதால், விளையாட்டுத் தொழில் தான் இனி வீரர்களை அழைத்துக் கொள்ளும் என்று நம்புவதற்கு வாய்ப்புக்கள் அதிகம் உண்டு. பொழுது போக்கு விளையாட்டு வீரர்கள் என்று எல்லோரை யும் மாற்ற முற்படும் ஒலிம்பிக் விதிகள்கூட, சில நேரங்களில் செயல்பட முடியாமல் திகைத்து நிற்பதைக் காணும்போது, வருமானம் வருகின்ற தொழிலாக விளையாட்டுக்கள் மாறி வருவதை யாரும் தடுக்க முடியாது என்ற சூழ்நிலை, அசுர வேகத்தில் வளர்ந்து வருகிறது.


என்றாலும், விளையாட்டு உடலை வளம் படுத்தவும், மக்களை மனிதர்களாக இயங்கச் செய்யவும் உதவுகிறது என்கின்ற கொள்கையை அறிந்து, அதில் பங்கு கொண்டு, பயன் பெறுவோம் என்று பின்பற்றுவோம். பயன் பெறுவோம்.


ஆமாம் !


விளையாட்டு வினை (துன்பம்) யாகும் என்ற தவறான பழமொழி மாறி, வினை (தொழில்) ஆகிறது என்று காலம் மாறிக் கொண்டு வருகிறது.


காலத்தின் அழைப்பை ஏற்பவர்கள் தான் நிம்மதி யாகவும் நிறைவாகவும் வாழ முடியும். அதற்காக இளைஞர் சியாராகிக் கொள்ள வேண்டியது இன்றியமையாத சி"மாகும். அதுவே நன்றாகும்.