உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 10.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

75

9. குடிமக்கட்குரிய கடமை

இனித், னித், தமது கடமையினை நன்குணர்ந்து செங்கோல் ஒச்சும் அரசரது அரசியலும், உழுதொழிலை இனிது நடாத்தி அதனால் வரும் விளைபொருள்களை எல்லார்க்கும் பகுத்துக் கொடுக்கும் வேளாண்வாழ்க்கைத் தாளாளரையே

அச்சாணியாகக் கொண்டு ஊர்ந்துசெல்லாநிற்கின்றது, இது,

66

‘பலகுடை நீழலுந் தங்குடைக்கீழ் காண்பர் அலகுடை நீழ லவர்”

என்றும்,

“உழுவார் உலகத்தார்க்காணி.”

என்றும், ஆசிரியர் திருவள்ளுவ நாயனார் கூறுமாற்றால் அறியப்படும். இன்னும் ஓர் அரசின்கீழ் வாழும் பல திறத்தரான குடிமக்கள் எல்லாரிலும், உழவும் வாணிகமும் மடியாது நடாத்தும் வேளாளக்குடிகளென்னும் அச்சுமரத்தின் இருபுறத்தும் உள்ள அவ்வுழவும் வாணிகமுமாகிய ஈருருளின் மேல் நின்றே அரசியலாகிய ஒரு பெருந்தேர் ஒடுகின்றதென்றும் உரைக்கலாம். இங்ஙனம் அரசியலுக்கு இன்றியமையாச் சிறப்பினரான வேளாண்மக்களின் வாழ்க்கை இனிது நடை பெறவே, அரசியல் இனிது நடைபெறுவதோடு, அவ்வரசின்கீழ் வாழும் ஏனைக் குடிமக்களின் வாழ்க்கையும் இனிது இ நடைபெறுமென்பது தானே போதரும். அஞ்ஞான்றிருந்த வேளாண்மக்கள் தாம் உலகிய லொழுக்கத்திற்கு முதல் வேராயிருப்பதனை நன்குணர்ந்து தங்கடமையின் வழா தொழுகினமையாற்றான், அவ்வுலகிய லொழுக்கஞ் செவ்வனே நடைபெறலாயிற்றென்று, பாண்டிமன்னனும் நல்லிசைப் புலவனுமாகிய இளம்பெருவழுதி என்பான்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_10.pdf/100&oldid=1579723" இலிருந்து மீள்விக்கப்பட்டது