உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 10.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74

மறைமலையம் 10

என்னும் அரிய செய்யுளே சான்றாம். 'இந்த உலகத்தார்க்கு நெல்லும் நீரும் உயிர் ஆகா, அரசனே உயிராகும்; அதுபோலக், கல்வியறிவிற்சான்ற என்னோரன்ன புலவர் தனக்கு உயிராதலை அறிதல் அரசற்குக் கடமையாகும் என்னும் அதன்பொருள் எத்துணை நுட்பமாகவும் அஞ்சா அறநெஞ்சத்துடனும் எடுத்துரைக்கப்பட் டிருக்கின்றது! மன்னன் உலகத்தார்க்கு உயிர் என்பதை எல்லாரும் அறிவர். கல்வியறிவின் மிக்க புலவர் அம் மன்னற்கு உயிராம் உண்மையினையறிவார் எவர்? அறிந்தாலும் அதனை எல்லாரும் அறியக் கூறுவார் எவர்? கல்விவல்ல புலவர்களை இல்லாத நாடும் அரசுங் கானகத்தையும் அதில் உலவுங் கோளரியையுமே ஒக்கும். ஆதலால். அறியாமை ருளை அகற்றி அறிவொளி பரப்பி அன்பையும் அறத்தையும் இன்பத்தையும் பெருகச் செய்யும் புலவர் குழுவினையுடை நாடே விண்ணவர் உறையும் வான்நாட்டினை யொப்பதாகும். இவ்வுண்மையினை யுணரவல்லார்க்கு, அரசியலுக்கு உயிராவார் புலவர்களேயென்ற மோசிகீரனாரது செய்யுள் நுட்பம் விளங்காதொழியாதென்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_10.pdf/99&oldid=1579722" இலிருந்து மீள்விக்கப்பட்டது