உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 10.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

73

8. அரசர்க்குரிய கடமை

மேற்கூறியவாறெல்லாம் அரசர்களும் புலவர்களாய்ப், புலவர்களும் அரசர்களாய், ஒரோவொருகாற் புலவர்கள் அரசர்களினும் மிக்க சிறப்புந் தலைமையும் வாய்ந்தவர்களாய், அவ் விருதிறத்தாருந் தம்மில் அளவளாய் வாழ்ந்த அப் பழ ங்கால நிலை இஞ்ஞான்றைத் தமிழ்நாட்டு நிலைக்கு எத்துணை வேறுபட்டதாய் இருக்கின்றது! அப் பழைய தமிழ்க்கால நிலையினை ஒப்பதொன்று இஞ்ஞான்று காணல் வேண்டுமாயின், அதனை இஞ்ஞான்றை மேல்நாட்ட வரிடத்தேதான் காணலாம். மேல்நாட்டு அரசர்களெல்லாருங் கல்வியில் வல்ல புலவர்களாய், அங்குள்ள புலவர்களுஞ் செல்வத்தின் மிக்க அரசர்களாய்ச், சிற்சிலகால் அவர் அரசரினம் மிக்க சிறப்புந் தலைமையும் வாய்ந்து அவரையுந் தஞ்சொல் வழி நிறுத்து அடக்கியாள்பவராய், அங்ஙன மாயினும் அவ்விருதிறத்தாருந் தம்முள் அளவளாவி வாழ்தலிற் குறை ஏதும் இலராய்ப் புகழ்மேம்பட்டு விளங்கல் எவரும் அறிந்த தொன்றன்றோ? பழைய தமிழ்வேந்தர்கள் தங்கீழ் வாழுங் குடிமக்கள் நலத்தையே முழுதும் வேண்டி நின்றமைக்கு அவர் வஞ்சினங் கூறுங்காற் “குடிபழி தூற்றுங் கோலேனாகுக என்று கூவிக் கூறினமையே சான்றாம். இனிக், குடிமக்களும், அக் குடிமக்களிற் சிறந்த புலவர்களுந் தம்மரசனை அங்ஙனமே தம்முயிராய்க்கொண்டு ஒழுகினமையும் அஞ்ஞான்றைப் புலவர்கள் பாடிய செய்யுட்களால் அறியப்பெறுகின்றேம். இதற்கு, மோசிகீரனார் என்னும் நல்லிசைப்புலவர் நுவன்ற,

‘நெல்லும்உயிர் அன்றே நீரும்உயிர் அன்றே, மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்: அதனால், யான்உயிர் என்பது அறிகை

வேன்மிகு தானை வேந்தற்குக் கடனே'

(புறநானூறு 186)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_10.pdf/98&oldid=1579721" இலிருந்து மீள்விக்கப்பட்டது