உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 10.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72

மறைமலையம் 10

அவ் விழுமிய நினைவாகிய அருமருந்தால் தம்மையறியாமலே தாம் நீடுவாழ்வரென்பதூஉம் அவர் அதன்கண் அறிவுறுத்திய மனவியல் நுட்பம் இனிது விளங்காநிற்கின்றது. இவ்வா றெல்லாம், பண்டைத் தமிழ்ப்புலவர், தம்மினும் நீடினிது வாழ்தலையே அவர்காலத்திருந்த அரசர்களெல்லாம் வேண்டி நின்றமையால், பழைய தமிழகமானது தமிழ் வளங்கெழுமித் திகழ, அதன்கண் உயிர்வாழ்ந்திருந்த பழந்தமிழ் மக்களெல்லாம் உயிரும் உடம்புஞ் செழித்து அறிவிலும் அன்பிலும் நாகரிகத்திலுந் தலைசிறந்து, இறைவனது அருட்பேற்றிற் குரியராய் விளங்காநின்றனர் என்பது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_10.pdf/97&oldid=1579720" இலிருந்து மீள்விக்கப்பட்டது