உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 10.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முற்காலப் பிற்காலத் தமிழ்ப்புலவோர்

71

தமிழ்ப்புலமை சான்ற ஔவையார் நீடுவாழ்தலை வேண்டித் தான் அரிதிற்பெற்ற அக் கருநெல்லிக்கனியினை அவர்க்கு அளித்த வள்ளன்மை பெரிது! பெரிது! அதனலான்றோ அவன் ஒளவையார் திருமொழியால்,

வலம்படு வாய்வாள் ஏந்தி ஒன்னார் களம்படக் கடந்த கழல்தொடித் தடக்கை ஆர்கலி நறவின் அதியர் கோமான் போரடு திருவிற் பொலந்தார் அஞ்சி! பால்புரை பிறைநுதற் பொலிந்த சென்னி நீல மணிமிடற் றொருவன் போல, மன்னுக பெரும! நீயே! தொன்னிலைப் பெருமலை விடரகத்து அருமிசைக் கொண்ட

சிறியிலை நெல்லித் தீங்கனி குறியாது

ஆதல் நின்னகத்து அடக்கிச்

சாதல் நீங்க எமக்கு ஈத்தனையே'

(புறநானூறு 91)

என்று பாராட்டி வாழ்த்தப்பட்டனன்! ‘தன்னை யுண்டவர் வாழ்நாளை நீள்விக்கும் அரியதொரு நெல்லிக்கனியினை நீ அரிதிற் பெற்றும், அதனை யுட்கொண்டு நீ யுயிர்வாழ நினையாமலும், அஃது அத்துணை மேதக்கது ஆதலை எனக்குத் தெரிவியாமல் நின்னுளத்தே அடக்கிவைத்தும், யான் சாதல் நீங்கி நீடுவாழுமாறு அதனை எனக்கே அளித்தனை! அதனால், தேவர் பிறரெல்லாந் தாஞ் சாவாமைப்பொருட்டு ஒருமருந்து பெற்ற அதனை அயின்றுஞ் சாக்காடு தீர்ந்திலராகத், தன்னை அணுகினாரை உடனே கொல்லும் ஒரு கொடு நஞ்சை அத் தேவர்கள் சாவாமைப் பொருட்டுத் தான் அயின்றுந் தான் ஊறுபடாதிருந்த நீலமணிமிடற்றொருவனாகிய சிவ

பிரானைப்போல் நீ என்றும் நிலைபேறுற்று வாழ்வாயாக!” என்று ஔவையார் இதன்கட் கூறிய வாழ்த்துரைப் பொருளை உண்ணுழைந்து நோக்குங்கால், உயர்ந்தோர் பிறர் வாழ வேண்டுமென விரும்பாது தாமே வாழ வேண்டுமென நினைப்பவர் தம்மைப்பற்றிய அந் நினைவால் நீடுவாழா தொழிவரென்பதூஉம், பிறர் வாழ்தலையே வேண்டித் தமக்கு வரும் ஊறுபாட்டையும் நோக்காது அவர்க்கு நன்றுசெய்பவர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_10.pdf/96&oldid=1579719" இலிருந்து மீள்விக்கப்பட்டது