உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 10.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70

தான்

மறைமலையம் 10

தான்

யினையே மேலதாகக் கருதி, அவரை நீடுஇனிது வாழச்செய்வ திற் கண்ணுங்கருத்தும் உடை உடையராயிருந்த அரும்பெருந் தகைமையுஞ் சிற்சில வரலாறுகளாற் புலனாகின்றது. இதற்கோர் உண்மை வரலாற்றினை ஈண்டெடுத்துக் காட்டுதும். ஈகையிற்சிறந்த வள்ளற்பெருமானாகிய அதியமான் நெடுமான் அஞ்சி என்பான் நீண்ட உயிர்வாழ்க்கையினைத் தருவதாகிய ஒரு கருநெல்லிக்கனியினை ஒருகால் அரிதிற் பெற்றனன். பெற்ற அது தன்னையுண்டார்க்கு உடல்உரம் மன உரங்களை உண்டாக்கி, அவரது உயிர்வாழ்க்கையினை மிகவும் நீளச் செய்வ தொன்றாதலால், அஃதெல்லார்க்கும் எளிதிற் கிடைப்ப தன்றென்றும், அத்துணை அரிதாகிய ஒருகனியினை அரசனாகிய உட்கொண்டு நீண்டகாலம் உயிர் வாழ்வதினும் அறிவிற்சிறந்த தமிழ்ப்புலவர் ஒருவர் உண்டு நீடுவாழ்வதே உலகத்திற்குப் பெருநன்மை பயக்குமென்றும் நினைந்துபார்த்தான்; பார்த்துத், தான் அறிந்த தமிழ்வல்ல சான்றோரில் ஒளவையாரே மிகச் சிறந்தவரெனவும், அவர் அப்போது முதுமைமிக்குச் சாநாளைத் தலைப்படுதலால் அவர் அக் கருநெல்லிக்கனியினை அருந்திச் சாதல்நீங்கி நீடுவாழ்தலே நன்றாமெனவுங் கருதி, அதனை அவர் கையிற்றந்து அவர் அதனை உட்கொண்டு பின்னும் பல ஆண்டுகள் நன்குயிர் வாழுமாறு செய்தனன். வறுமையும் நோயும் இன்றி எல்லாச் செல்வங்களிலுந் தழைத்து இனிதுவாழும் ஒர் அரசன் பின்னுந் தான் வலியுடன் வாழ்தற்கு ஒர் அருமருந்து பெற்றனனாயின் அதனைத் தான் அருந்தி நீடினிது வாழ விழைகுவனேயல்லது, அதனைச் செல்வவாழ்க்கையில் இல்லாப் பிறர் ஒருவர்க்குக் காடுக்கச் சிறிதுமே மனந்துணியான். ஏனெனில் மக்களேயன்றி ஏனைச் சிற்றுயிர்களுங்கூடத் தாம் உயிர்வாழவே விரும்பு மல்லது, தம்முயிரைத் துறந்து பிறவுயிரை வாழ்விக்கத் துணியா; இஃது எல்லா வுயிர்களிடத்துமுள்ள பொதுவியற்கையாகும். ஆனால், தம்முயிரையும் நீத்துப் பிறவுயிரைப் புரக்குந் தன்மையோ எல்லாவுயிர்களிடத்தும் அங்ஙனம் பொதுவகை யாற் காணப்படாமல், அறிவும் அன்பும் ஆற்றலும் மிக்க ஒருசில வுயிர்களிடத்துமட்டுமே ஒரோவொருகாற் சிறப்புவகையாற் காணப்படுவதாகும். ஆகவே, அதியமான் நெடுமான் அஞ்சி யென்னும் வள்ளற்பெருந்தகை தான்நீடுவாழ்தலை வேண்டாது,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_10.pdf/95&oldid=1579718" இலிருந்து மீள்விக்கப்பட்டது