உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 10.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முற்காலப் பிற்காலத் தமிழ்ப்புலவோர் யானே பிழைத்தனென்! சிறக்கநின் ஆயுள்! மிக்குவரும் இன்நீர்க் காவிரி

எக்கர் இட்ட மணலினும் பலவே”

69

(புறநானூறு 43)

என்னும் உருக்கமான செய்யுளை மனங்குழைந்துரைத்து, அவ்வரசிளஞ்செல்வன் உள்ளத்தைக் குளிரச் செய்தனர். ங்ஙனம் ஒரு புலவர் தாம் நடுவிகந்து பிழை செய்தும், அப் பிழையினைத் தாம் உணராமையேயன்றிப், பிழையேதுஞ் செய்யாத ஓர் அரசிளஞ்செல்வனையுங் கொடியதோர் இழிமொழியால் இகழ்ந்துபேசியது எத்துணைப் பெருஞ் சீற்றத்தை விளைக்கத்தக்கதாகும்! நிலையிற்குறைந்தவரே இத்தகைய குறும்பினைப் பொறார். அங்ஙனமாக, மாப்பெருஞ் செல்வத்திலுந் தலைமையிலும் உயர்ந்து திகழும் ஓர் அர சிளைஞன் அத் தகுதியில் செயலைப் பொறுத்திருப்ப தென்றால், அஃது அவனுள்ளம் அறிவாலும் அன்பாலும் எத்துணை மென்பதம் வாய்ந்து அமைதியுற்றிருக்க வேண்டு மென்பதனை இனிது புலப்படுக்கின்றது! இதனை அப் புலவர்பெருமானே மேற்கிளந்த செய்யுளில் "நின்யான் பிழைத்தது நோவாய் என்னினும், நீ பிழைத்தாய்போல் நனிநா ணினையே!" எனக் கூறுமாற்றானும் இங்ஙனம் பெரும்பிழை செய்தாரையும் பொறுத்தல் அவ்வரசிளைஞன்றன் அரச குடியிற் பிறந்தார்க்குத் தொன்று தொட்ட விழுப்பேரொழுக்க மாய்ப் போதருகின்ற சிறப்பினை அவர் “தம்மைப் பிழைத் தோர்ப் பொறுக்குஞ் செம்மல், இக்குடிப் பிறந்தோர்க்கு எண்மை காணும்” எனத் தெரிக்குமாற்றானும் நன்குணரலாம். இதனையும் இதனை யொத்த வேறு பழைய வரலாறுகளையும் ஆய்ந்தறியுங்காற், பழைய தமிழ்வேந்தர்கள் தமக்குத் தமிழ் வல்லார் செய்த பெரும் பிழைகளையும் அகத்துக் கொள்ளாது, அவரை யென்றும் ஒரு தன்மையாகவே பாராட்டி வந்தன ரென்பதுங், கற்றாரேயன்றி மற்றையார் செய்த பிழைகளையும் அவர் மிகப்பொறுத்து எதனையும் ஆய்ந்தோய்ந்து பார்த்து முறை செய்யும் இயல்பினராய் ஒழுகினரென்பதுந் தெற்றென விளங்காநிற்கின்றன.

இன்னும், பண்டைத்தமிழ் அரசர்கள் தமது உயிர் வாழ்க்கையினுந் தமிழ்வல்ல சான்றோரின் உயிர் வாழ்க்கை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_10.pdf/94&oldid=1579717" இலிருந்து மீள்விக்கப்பட்டது