உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 10.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68

மறைமலையம் 10

காட்டுவாம்.சோழன் நலங்கிள்ளி என்னும் மன்னர் பெருமானின் தம்பி மாவளத்தானுந், தாமப்பல் கண்ணன் என்னும் புலவர் பெருந்தகையும் வட்டாடிக்கொண்டிருந்தவழிப், புலவர் அவ் வாட்டத்தில் ஏதோ சூதுசெய்ய, அதுகண்டு பொறாத அவ்வரசிளஞ் செல்வன் வெகுண்டு தன்கையிலிருந்த வட்டை வீசியெறியத், தாமப்பல் கண்ணனார் “நீ சோழனுக்குப் பிறர்தாய் அல்லை, என்று மிகவுங் காடுமையான சொல்லால் அவனை இழித்துப் பேசினர். அக்கொடுஞ்சொற் கேட்டும், மாவளத்தான் அவர்மேற் சீற்றங்கொள்ளாது, வாளாநாணித் தலைகவிழ்ந்திருந்தனன். இதற்குட் சினந்தணிந்த அப் புலவர், தாம் சூதுசெய்தது கண்டு அவன் வெகுண்டது முறையே யா யே யாமென்றுந், தாஞ்செய் பிழையினைத் தாம் உணராமல் தாம் அச் சிறந்த அரசிளஞ் சல்வனை அத்துணைக் கொடுஞ் சுடுசொல்லால் இழித்துப் பேசியது பெரும் பிழையே யாமென்றும், இங்ஙனம் இருகாற்றவறிழைத்த வழியுந் தமக்கு ஏதுந் தீதுபுரியாது வாளா நாணியிருந்தது அவற்கு ஒரு பெரு மேதகு குணமேயாகுமென்றுந் தெளிய வுணர்ந்து,

66

"தன்னகம் புக்க குறுநடைப் புறவின் தபுதி அஞ்சின் சீரை புக்க

வரையா ஈகை உரவோன் மருக!

நேரார்க் கடந்த முரண்மிகு திருவிற்

றேர்வண் கிள்ளி தம்பி வார்கோற்

கொடுமர மறவர் பெரும! கடுமான் கைவண் டோன்றல் ஐயம் உடையேன், ஆர்புனை தெரியல்நின் முன்னோர் எல்லாம் பார்ப்பார் நோவன செய்யலர் மற்றிது ஞநர்த்தோ நினக்கென வெறுப்பக் கூறி நின்யான் பிழைத்தது நோவாய் என்னினும் நீ பிழைத் தாய்போல் நனிநா ணினையே! தம்மைப் பிழைத்தோர்ப் பொறுக்குஞ் செம்மல் இக்குடிப் பிறந்தோர்க்கு எண்மை காணுமெனக், காண்டகு மொய்ம்ப காட்டினை யாகலின், கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_10.pdf/93&oldid=1579716" இலிருந்து மீள்விக்கப்பட்டது