உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 10.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முற்காலப் பிற்காலத் தமிழ்ப்புலவோர் அதூஉஞ் சாலும் நற்றமிழ் முழுதுஅறிதல்; அதனொடும் அமையாது அணுக வந்துநின் மதனுடை முழவுத்தோள் ஓச்சித் தண்ணென வீசியோயே வியலிடங் கமழ,

இவண்இசை உடையோர்க் கல்லது அவணது உயர்நிலை உலகத்து உறையுள் இன்மை விளங்கக் கேட்ட மாறுகொல்

வலம்படு குரிசில் நீ ஈங்கிதுசெயலே"

67

(புறநானூறு)

என்னும் அரிய செய்யுளை அவனை நோக்கிக் கூறினர்.

66

இம் மென்பூஞ்சேக்கைமீது, அது மிகவுந் தூயதாக வைத்து நின்னால் ஒம்பப்படுதலை யறியாமல், ஏறித்துயின்று பெருந்தவறிழைத்த என்னை, நீ நின் வாளால் இருகூறாக வட்டி வீழ்த்த வேண்டியிருக்க, நீ அங்ஙனஞ் செய்யாது விட்டது, நீ தமிழ் முழுதும் நன்கறிந்து அதனால் தமிழறிவு மிக்காரது அருமையினை இனிதுணர்ந்த பயன் அன்றோ! அதுவேயுமன்றி, எனதருகே வந்து நின்று நீ கவரி கைக்கொண்டு என்மேல் மெல்லிய குளிர்ங்காற்றுப்பட இவ்விடமெல்லாம் மணக்கும்படி வீசிய பரிசை எண்ணிப் பார்க்குங்கால், இவ்வுலகத்தில் இங்ஙனஞ் செயற்கரிய செய்து பெரும்புகழ் பெற்றார்க்கல்லது பிறர்க்கு மறுமைக்கண் உயர்ந்த இன்ப உலகத்தில் இருத்தல் வாயாது என்பதனை நீ விளங்கக் கேட்ட பெற்றி புலனாகின்றதன்றோ?” என்னும் இப் பாட்டின் கருத்துப் பொருள், அச் சேரமன்னனது தமிழறிவின் மாட்சியினையும், அவன் இம்மையிற் கற்றாரை யோம்புதல் முதலான செயற்கரிய செய்து பெரும்புகழ் பெற்று விளங்குதலையும், அதனான் அவன் மறுமைக் கண்ணும் இன்னுஞ் சிறந்த இன்பவுலகத்தைப் பெறுதல் திண்ணமாதலையும் மிகவும் நயமாக உள்ளடக்கி நிற்றல் வியக்கற்பாலதாயிருக்கின்றது.

இன்னும், பழைய தமிழ்வேந்தர்கள் தமக்கு நண்பராயுள்ள தமிழ்ப்புலவோர் ஒரோவொருகால் தம்மை வெகுண்டு ஏசிய வழியும், அதற்காகத் தாம் அவர்மேற் சினவாது பொறுமை யோடிருந்து, பின்னர் அப்புலவோராற் பாராட்டப்பட்ட வரலாறுகளும் பல. அவை தம்முள் ஒன்றனை இங்கெடுத்துக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_10.pdf/92&oldid=1579715" இலிருந்து மீள்விக்கப்பட்டது