உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 10.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

மறைமலையம் 10

இனிப், பழைய தமிழ்வேந்தர்கள், தமிழ்ப்புலவோரைத் தலைவராகவும் தம்மை அவர்க்கு ஏவலராகவுங் கொண்டெ ாழுகின வரலாறுகளும் பல உள. அவற்றுள் ஒன்றனை இங்கெடுத்துக் காட்டுதும். ஒருகால் மோசிகீரனார் என்னும் நல்லிசைப் புலவர், சேரமான்தகடூர் எறிந்த பெருஞ்சோரலிரும்பொறை என்னுந் தம்மரசனது அரண்மனையிற் பல இடங்களின் காட்சிகளையும் நோக்கிக்கொண்டு வருகையில், அவ்வரசனது போர்முரசம் ஒன்று மிகவுந் தூய்மையாக வைத்துப் பாதுகாக்கப்படும் ஒர் அறையினுள்ளே வந்து சேர்ந்தனர். அப்போது அப்போர் முரசம் நீராடி வருதற் பொருட்டு நீர்த்துறைக்குச் சென்றிருந்தது; அது வைக்கப்படுங் கட்டிலோ எண்ணெய் நுரையை முகந்து வைத்தாற்போலும் மெல்லணை யிடப்பட்டிருந்தது; அதுகண்ட, அப் புலவர் பெருந்தகை அக் கட்டிலின் மேல் ஏறிப் படுத்தார். படுத்த அவர் தம்மை அறியாமலே அயர்ந்துறங்கி விட்டனர். அந்நேரத்தில் அப்பக்கமாய்ப் போந்த சேரவேந்தன், தனது போர்முரசு இருத்தற்குரிய அக் கட்டிலின் மேன் மோசிகீரனார் நன்கயர்ந்து உறங்குதல் கண்டு, அவர்மேற் சிறிதுஞ் சினவானாய்ப், பின்னும் அவர்மீது அன்பு மிகப்பெற்று, அருகிருந்ததொரு கவரியினைக் கைக்கொண்டு, இன்னும் அவர் நன்றாய் உறங்குதல் கருதி, மென்காற்று அவர்மேற் பட வீசுவானாயினன். பின்னர்ச் சிறிது நேரத்திலெல்லாம் உணர்வுகூடி யுறக்கம் நீங்கி யெழுந்த மோசிகீரனார் தம்மருகே சேரவேந்தன் நின்றபடியாகத் தமக்குக் கவரிவீசுதலைக் கண்டு முதலில் திடுக்கிட்டு, அதன்பின் மனவமைதியுற்று, அவனது தமிழ்ப் பேரன்பின் றிறனை வியந்து,

66

“மாசுஅற விசித்த வார்புறு வள்பின்

மைபடு மருங்குல் பொலிய மஞ்ஞை ஒலிநெடும் பீலி ஒண்பொறி மணித்தார்

பொலங்குழை உழிஞையொடு பொலியச் சூட்டிக்

குருதி வேட்கை உருகெழு முரசம்

மண்ணி வாரா அளவை எண்ணெய்

நுரைமுகந் தன்ன மென்பூஞ் சேக்கை அறியாது ஏறிய என்னைத் தெறுவர

இருபாற் படுக்கும்நின் வாள்வாய் ஒழித்ததை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_10.pdf/91&oldid=1579714" இலிருந்து மீள்விக்கப்பட்டது