உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 10.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முற்காலப் பிற்காலத் தமிழ்ப்புலவோர்

65

ச்

இச் சிறுவர் என்று அதன்பிற் கூறியவாற்றால், அத்துணை ஈகையறங்களிற் சிறந்த அரசர் வழிப்பிறந்த இவ்வருட் குழவிகளை யானைக் காலின் கீழ் இட்டுத் தேய்ப்பித்தல் அறமாகுமோ என்பது குறிப்பித்தாராயிற்று; அதுவேயுமன்றி, இச்சிறார் யானையைக் கண்டு அஞ்சியழும் இளங் குழவிப் பருவந் தாண்டி, அதனைக் கண்டு வியந்துநோக்கும் பிள்ளைமைப்பருவத்தினர் என்றமையாற், சிறிது சிறிது அறிவு கூடப் பெற்றுவரும் இம் மக்களைக் கண்டு கன்னெஞ்சம் உடையாரும் கரைந்துருகுவரன்றி அவரைக் கொலைசெய்தற்குக் கருதாரென்பது குறிப்பித்தாராயிற்று; அதன்மேலுந், தாம் பழகியறியாத புதியதோரிடத்திற் றாம் வந்திருத்தல் கண்டு ச்சிறுவர் வெருண்டு நோக்குகின்றனர் என்றமையால், இவ் விளம்பிள்ளைகள் அஞ்சி விழித்தலைப் பார்த்து எத்தகைய வரும் உளம் இரங்குவரென்பது குறிப்பித்தாராயிற்று; இத்துணையும் எடுத்துரைத்தபின் நம் ஆசிரியர் அச் சோழவேந்தனை நோக்கி, 'யாம் சொல்லிய இச்சொற்களை நீ நின் கருத்துவைத்துக் கேட்டாயாயிற், பின்னர் நீ விரும்பியது செய்க' என்று எத்துணை நயமாகக் கூறி அவனைத் தம் கருத்துக்கு ஒருப்படுவிக்கின்றார்! பாருங்கள்! இவ்வாசிரியர் கோவூர்கிழாரின் அருள் நெஞ்சப் பான்மையும், அவ்வர சிளைஞரைக் காக்கும் பொருட்டு அவர் துணிந்தெழுந்து அவரைக் கொல்லப்புக்க அரசனுக்கு எடுத்துக்கூறிய அறவுரையும் எவ்வளவு மேதக்கனவாயிருக் கின்றன! இவ்வளவு மேதக்க அறவுரையைக் கேட்ட பின்னுந் தருண்டு மனந்திருந்தாத ஒரு மகன் இருப்பனோ! ஆதலால், அக் கிள்ளிவளவன் தான் கொண்ட சினமுஞ் செற்றமுந் தீர்ந்து, அம் மலையமான் மக்கண்மேல் அருள் பெருகி அவர்களை உயிர் ள பிழைப்பித்துக் காத்தனன். இங்ஙனமே, பண்டைக்காலத்திருந்த அஃகா அறநெஞ்சமும் பொய்யாநாவும் வாய்ந்த அருந்தமிழ்ப் புலவர்கள் செய்த செயற்கருஞ் செயல்களும், அவர்தம் அறவுரைகேட்டு ஆண்மையின்மிக்க வேந்தர்களும் அவர்க் கடங்கி அறநெறிச்சென்ற வரலாறுகளும் இன்னும் எத்தனையோ பல உள; அவையெல்லாம் ஈண்டெடுத்துக் காட்டலுறின், இது மிக விரியும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_10.pdf/90&oldid=1579713" இலிருந்து மீள்விக்கப்பட்டது