உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 10.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64

மறைமலையம் -10

எஞ்ஞான்றும் நெஞ்சம் நெக்குருகி நினைந்து வியந்து பாராட்டற்பால தொன்றாயிருத்தலின், அதனையும் இங்கே எடுத்துக்காட்டுதும். சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் என்பான் தனக்குப் பகைவனான மலயமான் என்னும் அரசன் பயந்த சிறுபிள்ளைகளைக் கொணர்ந்து, அவரைத் தனது யானைக்காலின்கீழ் இட்டுக் கொல்லத் துவங்கியவழி, அதனைக் கண்ட நல்லிசைப் புலவரான கோவூர் கிழார் பெரிதும் மனங்கலங்கி, அவ்வரசனை நோக்கி,

“நீயே புறவின் அல்லல் அன்றியும், பிறவும், இடுக்கண் பலவும் விடுத்தோன் மருகனை! இவரே, புலன்உழுது உண்மார் புன்கண் அஞ்சித் தமதுபகுத் துண்ணுந் தண்ணிழல் வாழ்நர்; புன்தலைச் சிறாஅர்; மன்றுமருண்டு நோக்கி விருந்திற் புன்கணோ உடையர்;

கேட்டனை யாயின் நீ வேட்டது செய்ம்மே!”

(புறநானூறு 46)

என்னும் மிக உருக்கமான செய்யுளைச் சொல்லி, அச் சிறார் அவனால் அங்ஙனங் கொல்லப்படாமற் றப்பும்படி செய்தனர். இவ் விழுமிய செய்யுளில் ஆசிரியர், அம் மன்னன் அச் சிறார் மேற்கொண்ட சினத்தை ஆற்றி, அவன் அவர்மேல் அருளுடைய னாமாறு செய்யுந்திறம் பெரிது! பெரிது! ஒரு வேட்டுவனால் துரத்தப்பட்டுவந்த ஒரு புறாவினைப் பாதுகாத்தல் வேண்டி, அப் புறாவின் எடைக்கு ஈடாகத் தன் உடம்பின் தசையை அறுத்து அவ்வேட்டுவற்குக் கொடுத்த அருட்செல்வனான பழைய ஒரு சோழ மன்னன் வழியிற் பிறந்தவன் நீ' என்று அவனை நம் புலவர் பெருமான் முன்னிலைப்படுத்து, அவனது நினைவைத் தன்முகப்படுத்தலி னாலேயே சிற்றுயிர்கள் மாட்டும் அத்துணை அருள் நெஞ்சம் வாய்ந்தார் மரபிற்றோன்றிய கிள்ளிவளவன் ஏனைப்பிறவியிற் சிறந்த மக்கட் பிறவியில் வியில் வந்தார்மாட்டு இன்னும் ன்னும் எத்துணை மிகுந்த அருள்நெஞ்சம் வாய்ந்தானாய் ஒழுகல் வேண்டுமென்பது குறிப்பித்தாராயிற்று; இன்னும், மக்கட் பிறவியுள்ளுஞ் சிறந்த மன்னர் குடியிற் றோன்றித், தாம் உண்ணும் உணவையும் வறுமைப்பட்ட புலவர்க்கும் பகுத்துக் கொடுத்து அவரை யோம்பும் மலையாமானாட்டு அரசர் குடியின் வழித்தோன்றல்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_10.pdf/89&oldid=1579712" இலிருந்து மீள்விக்கப்பட்டது