உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 10.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க

முற்காலப் பிற்காலத் தமிழ்ப்புலவோர்

63

பின்னும் ஒருகாற் சோழன் நலங்கிள்ளிவேந்தன் தன் தாயத்தானான நெடுங்கிள்ளியின் மற்றொரு நகராகிய உறையூரின் மேற் படையெடுத்துச் சென்று அதனை முற்றுகை செய்ய, நெடுங்கிள்ளி முன்போலவே அவன்மேல் எதிர்ந்து செல்லாது, தனது கோட்டைவாயிற் கதவை அடைத்துக்கொண்டு

உள்ளிருந்தனன். அதுகண்டு அவ்விருவர்க்கும் நண்பரான ஆசிரியர் கோவூர் கிழார், அவரிருவர்க்குள்ளும் உண்டான பகைமை யொழித்து, அவரை உறவு கொள்ளச் செய்யுங் கருத்தினராய் அவ்விருவரையும் நோக்கிப் பிற்குறித்த

பாவினைப் பகர்வாராயினர்:

66

“இரும்பனை வெண்தோடு மலைந்தோன் அல்லன், கருஞ்சினை வேம்பின் தெரியலோன் அல்லன், நின்ன கண்ணியும் ஆர்மிடைந் தன்றே! நின்னொடு பொருவோன் கண்ணியும் ஆர்மிடைந் தன்றே! ஒருவீர் தோற்பினுந் தோற்பது உங்குடியே! இருவீர் வேறல் இயற்கையும் அன்றே! அதனாற் குடிப்பொருள் அன்று நுஞ்செய்தி; கொடித்தேர் நும்மோர் அன்ன வேந்தர்க்கு

மெய்ம்மலி உவகை செய்யும் இவ் விகலே.

(புறநானூறு 45)

'சோழர் குடியிற் பிறந்தவராகிய நீவிர் இருவீரும் ஆத்தி மாலையைச் சூடுவீராவீர்! நின்னைப் பகைத்து வந்தவன் பனந்தோடு புனையுஞ் சேரனும் அல்லன், வேப்ப மாலையணியும் பாண்டியனும் அல்லன்; நும்முள் ஒருவீர் தோற்றாமலும் அது நுமது குடிக்கு வடுவேயாகும்; இருவீரும் வற்றியடைதலும் இயலாது; ஆதலால் நீவிர் ஒருவரை யொருவர் எதிர்த்தல் நுமது குடிக்குத் தக்கதன்று; இவ்வாறு நீவிர் எதிர்த்தல் நும் பகையரசர்க்குப் பெரியதொரு மகிழ்ச்சியினைப் பயப்பதாகும்' என்று மிக நயமாக அறிவுரைகூறி இப் புலவர் பெருமான் அவ் விருவரையும் ப்பு நட்புக்கொள்ளச் செய்தமை நினையுந்தோறும் எவ்வளவு மகிழ்ச்சியினை நமக்குத் தருகின்றது!

ன்னும், இப் புலவர் பெருந்தகையார் செய்த பேரருட் சயல் ஒன்று அருளொழுக்கம் உடையாரெல்லாராலும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_10.pdf/88&oldid=1579711" இலிருந்து மீள்விக்கப்பட்டது