உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 10.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62

உடை

மறைமலையம் – 10 அறவை யாயின் நினதெனத் திறத்தல்! மறவை யாயிற் போரொடு திறத்தல்! அறவையும் மறவையும் அல்லை யாகத் திறவாது அடைத்த திண்நிலைக் கதவின் நீண்மதில் ஒருசிறை ஒடுங்குதல்

நாணுத்தகவு உடைத்துஇது காணும் காலே.'

(புறநானூறு 44)

என்னும் அரிய அறவுரைச் செய்யுளை அஞ்சாது நுவன்று அறம் மறம் என்னும் இருவகை நிலையில் ஒன்றை அவ்வரசன் மேற்கொள்ளுமாறு அறிவுதெருட்டினமை பெரிதும் வியக்கற் பாலதா யிருக்கின்றதன்றோ? 'போர்செய்தலாற் பல்லுயிர்க்கும் வரும் ஏதம் அஞ்சி அதனை ஒழிதல் வேண்டும் அறவுள்ளம் யையாயின், “இந்நகரும் என்னரசும் நின்னுடையனவே' என னிது கூறிப் பகைத்த மன்னனோடு உறவுகொள்ளல் வேண்டும்; அஃது இசையாதேல் ஆண்மையுள்ளம் உடையை யாய்ப் பகைத்து எதிர்த்தவன்மேற் போர்க்கு எழுதல் வேண்டும்; இரண்டிலொன்றுஞ் செய்யாது, நின் கோட்டையின் அகத்துள்ள குடிமக்களும் பிறவுயிர்களும் அளவிலாத் துன்பம் எய்த, நீ கோட்டைவாயிற் கதவை யடைத்துக் கொண்டு நின் அரண்மனையினுள்ளே இனிது வைகுதல் நாணத்தக்கதாகும்’ என்று இப் புலவர் பெருமான் அவ் வரசனை இடித்துக்கூறிய அஞ்சா உள்ள உரம் நினையுந்தோறும் பெரியதோர் இறும் பூதினைப் பயவாநிற்கின்றது! பகைத்து நின்றவர் எளிய மக்கள் அல்லர்; சோழவேந்தர் குடியிற் பிறந்த சோழ மன்னராவர், இவர் தமக்கு டையே சென்று அஞ்சியிருந்த மன்னற்கு இடிப்பான அறிவுரை பகர எவரேனும் மனந்துணிவரோ! அஞ்ஞான்றை அரசர்கள், செந்தமிழ்ப் புலமை சான்ற பெரியாரைத் தம்மினும் மேலாக நன்குமதித்து அவர்தம் ஆணைவழி யொழுகி வந்தமையானும், அஞ்ஞான்றை நல்லிசைப் புலவர்களும் அவர் அங்ஙனந் தமக்கடங்கி யொழுகுமாறு ஆன்றமைந்த அறவுள்ளமும் பொய்யாநாவும் வாய்ந்தாராய் நன்றுசெய்தலிலேயே கருத்தொருங்கி நின்றமையானும், அங்ஙனம் அரசரும் புலவரும் அரியதொரு நட்பின் கெழுதகைமையின் வழாது திகழலாயினர் என்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_10.pdf/87&oldid=1579710" இலிருந்து மீள்விக்கப்பட்டது