உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 10.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முற்காலப் பிற்காலத் தமிழ்ப்புலவோர்

61

சான்றோரைத் தன்னிலும் மிகமேலாக நன்குமதித்து அவரது சொல்வழி நடந்து தனது மெய்ப்புகழை நிலைநிறுத்திய கோப்பெருஞ்சோழனை யொத்த தமிழ்வேந்தர் இஞ்ஞான்றிருந் தனராயின், இத்தமிழ்நாடுந் தமிழ்மொழியும் எத்துணை மேலான நிலையில் திகழ்ந்திருக்கும்! அந் நல்வினை இப்போதிவற்றிற் கில்லையே!

இன்னுங், கோப்பெருஞ்சோழனே யன்றி, அஞ்ஞான்றிருந்த வேறுபல் தமிழ்வேந்தர்களுந் தமிழ்வல்ல நல்லிசைப் புலவர்களைத் தம்மினும் மேலாகப் பாராட்டி, அவர் கூறிய அறிவுரை கேட்டுத், தம்முட் செற்றம் ஒழிந்து அன்பிற்கெழுமி இனிது வாழ்ந்த உண்மை வரலாறுகள் மேலும் எத்தணையோ பல உள. அவற்றுள் இன்னும் இரண்டு ஈண்டு எடுத்துக் காட்டுதும். போராண்மையிற் றனக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லானாய் அடலேறெனநின்ற சோழன் நலங்கிள்ளி என்னும்

மன்னர்

பெருமான்

ஒருகால் தன்

தாயத்தானாகிய

நெடுங்கிள்ளி யென்பவன்மேற் சினங்கொண்டு, அவன் அரசாண்ட ஆவூரை முற்றுகை செய்தனன். அங்ஙனம் அவன் முற்றுகை செய்தவழி, நெடுங்கிள்ளி அரசன் அவனை யெதிர்ந்து அவனொடு போர் புரியாமல் தனது கோட்டை வாயிற் கதவினை அடைப்பித்துக் கொண்டு, தன் அரண்மனை யினுள்ளே வாளா இருந்தனன். அஞ்ஞான்று அவரிருவர்க்கும் நண்பராயிருந்த கோவூர் கிழார் என்னும் நல்லிசைப்புலவர் அடைத்திருந்த நெடுங்கிள்ளி யுழைச்சென்று,

ս

"இரும்பிடித் தொழுதியொடு பெருங்கயம் படியா, நெல்லுடைக் கவளமொடு நெய்ம்மிதி பெறாஅ

திருந்தரை நோன்வெளில் வருந்த ஒற்றி

நிலமிசைப் புரளுங் கைய, வெய்துயிர்த்து

அலமரல் யானை உருமென முழங்கவும், பால்இல் குழவி அலறவும், மகளிர் பூஇல் வறுந்தலை முடிப்பவும், நீர்இல் வினைபுனை நல்இல் இனைகூஉக் கேட்பவும் இன்னாது அம்ம; ஈங்கு இனிது இருத்தல்;

துன்அருந் துப்பின் வயமான் தோன்றல்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_10.pdf/86&oldid=1579709" இலிருந்து மீள்விக்கப்பட்டது