உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 10.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60

❖ LDM MLDMOELD-10 மறைமலையம்

அதனால், ஒழிகதி லத்தை நின்மறனே வல்விரைந்து எழுமதி! வாழ்கநின் உள்ளம்! அழிந்தோர்க்கு ஏம மாகும்நின் தாள்நிழல் மயங்காது

செய்தல் வேண்டுமால் நன்றே; வானோர்

அரும்பெறல் உலகத்து ஆன்றவர்

விதுப்புறு விருப்பொடு விருந்துஎதிர் கொளற்கே”

(புறநானூறு 213)

வ் வருந்தமிழ்ப் பாவில் எத்துணை நயமாக உண்மையை எடுத்துச்சொல்லி இந்நல்லிசைப்புலவர் அம் மன்னன் கொண்ட சீற்றத்தைத் தணிக்கின்றார் காண்மின்! நின்மேற் போர்க்கு வந்தார் இருவரையும் யாரென நினைத்துப் பார்ப்பின் அவர் நினக்குப் பகைவராய் உள்ளவர் அல்லார்; நீயும் அங்ஙனமே அவர்க்குப் பகைவனாய் உள்ளவன் அல்லை; நீ இங்கே நின் அழியா நற்பெரும்புகழை நிலை நிறுத்தி வானுலகுசெல்லும் ஞான்று, நீ விட்டுச்செல்லும் அரசுரிமை அவர்க்கன்றோ உரியதாகும்? இது நீ அறிந்ததுதானே. இன்னும், நின்மேற் போர்க்கெழுந்த இளைஞர் தோற்றே போனாரானாலும், நின் செல்வத்தினை அவர்க்கல்லாமல் வேறியார்க்கு விடுவை? நீ அவரொடு பொருது தோற்றனை யானால், நின் பகைவர் மகிழ உலகில்

6

வசையினையன்றோ நிறுத்துவை! அதனால், அவரொடு பொருதல் ஒழிக! வறுமையால் வருந்தி வந்தார்க்கு நின் அடிநிழல் அது தீர்த்துத் தண்ணருள் வழங்குமாறு செய்க! என்று அப் புலவர் பெருந்தகை அஞ்சாதெடுத்துரைத்த நயமிகு மெய்யுரை எத்துணைச் சீற்றங் கொண்டிருந்தாலும் அது தணித்து வேந்தர்க்கு அறிவு தெருட்டுந் திறனுடைத்தாய்த் திகழ்தல் எவர்க்கும் விளங்காற்பாலதேயாம். இவ்வறிவுரை கேட்ட பின்னரே கோப்பெருஞ்சோழன் தன்மக்கள் இருவர்மேலும் போர் செய்தலை யொழிந்து தன் அரசியலையும் அவர்க்கே விட்டுத் துறவு பூண்டானாதல் வேண்டுமென்பது உய்த்துணரப் படும். இங்ஙனம் அறிவு தெருட்டி அவ் வேந்தர் பெருமானுக்கு எஞ்சாப் பெரும்புகழை என்றும் நிலவவைத்த எயிற்றியனாரது புலமையன்றோ உண்மை நல்லிசைப் புலமையாகும்! இவரது உண்மையுரையைக் கேட்டு உளந்திருந்திய அரசன் அல்லனோ உண்மையரசனாவன்! தமிழ்ப் புலமை நிறைந்த இச்

ச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_10.pdf/85&oldid=1579708" இலிருந்து மீள்விக்கப்பட்டது