உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 10.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முற்காலப் பிற்காலத் தமிழ்ப்புலவோர்

59

இடையே புகுந்து அக் கொடும்போர் நிகழவொட்டாமற் றடுத்து, வேந்தர் பெருமானாகிய கோப்பெருஞ்சோழற்கு வழிவழி மங்காஇசையே பொங்கிப் பெருகுமாறு செய்தனர். செயற்கரிய செய்த அப் புலவர் பெருந்தகைக்கு, இத் தமிழுலகம் யாது த் கைம்மாறு செய்யவல்லது! அங்ஙனம் அரியது ஆற்றிய புலவர் பெருமான் புல்லாற்றூர் எயிற்றியனார் எனப்படுவர். தன் மக்கள் ருவர் தன்மேற் போர்க்கு வந்தமையறிந்து சீற்றங்கொண்ட கோப்பெருஞ்சோழன் தானும் அவர்மேற் போர்செய்தற்கு எழுந்தமை யறிந்தவளவானே, இந் நல்லிசைப்புலவர் உடனே அவ்வரசன்பாற் சென்று கீழ்க்குறித்த செய்யுளை நுவன்று, அவனது சினத்தை யாற்றி, அக்கொடும்போர் நிகழாவாறு செய்து, அமைதியையுண்டாக்கித், தமிழுலகிற்கு ஒருபெரும் புகழினை நிலைநிறுத்தினார். அவர் அப்போது கோப்பெருஞ் சோழனை நோக்கி நுவன்ற செய்யுள் வருமாறு;

“மண்டமர் அட்ட மதனுடை நோன்றாள்

வெண்குடை விளக்கும் விறல்கெழு வேந்தே! பொங்குநீர் உடுத்தஇம் மலர்தலை யுலகத்து நின்தலை வந்த இருவரை நினைப்பின் தொன்றுஉறை துப்பின்நின் பகைஞரும் அல்லர் அமர்வெங் காட்சியொடு மாறுஎதிர்பு எழுந்தவர்; நினையுங் காலை நீயும்மற் றவர்க்கு

அனையை அல்லை அடுமான் தோன்றல்!

பரந்துபடு நல்லிசை எய்தி மற்றுநீ

உயர்ந்தோர் உலகம் எய்திப் பின்னும்

ஒழித்த தாயம் அவர்க்குஉரித் தன்றே!

அதனால், அன்ன தாதலும் அறிவோய்! நன்றும் இன்னுங் கேண்மதி இசைவெய் யோயே! நின்ற துப்பொடு நிற்குறித் தெழுந்த எண்ணில் காட்சி இளையோர் தோற்பின், நின்பெருஞ் செல்வம் யார்க்கு எஞ்சுவையே? அமர்வெஞ் செல்வம் நீ அவர்க்கு உலையின், இகழுநர் உவப்பப் பழிஎஞ் சுவையே!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_10.pdf/84&oldid=1579707" இலிருந்து மீள்விக்கப்பட்டது