உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 10.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58

மறைமலையம் 10

வியப்புண்டாகாது! தந்தை செய்த நன்றியை மறந்து அவனொடு மாறுகொண்டு நிற்கும் புதல்வர்கள் இக் காலத்துத் தான் உளர் என்று நினைக்கும் நம்மனோர், அப் பழைய நல்ல காலத்தும் அத்தகைய நன்றிகெட்ட புதல்வர்கள் இருந்தன ரென்பதை அறியுங்கால் வியப்படையாமல் இருத்தல் ஏலுமோ! தீய, நன்றிகெட்டபுதல்வர்களும் உடன் பிறப்பினரும் எக்காலத்தும் எவ்விடத்தும் உளர். ஈகையிற் சிறந்த அருள் உள்ளம் வாய்ந்த வள்ளற்பெருமானுங், கல்வியறிவின்மிக்க சான்றோரைத் தன் இன்னுயிரெனுங், உண்மையாய்க்கொண்டு ஒழுகினவனும், நல்வினை செய்தலையே தன் வாழ்நாள் முழுதுங் கடப்பாடாகக் கொண்டவனுந், தானுந் தமிழ்க்கல்வியறிவில் முதிர்ந்து நிற்வனும் ஆன இச் சோழவேந்தனைத் தமக்குத் தந்தையாகப் பெற்ற புதல்வர் நல்லறிவும் உள்ளன்பும் நல்வினையும் வாய்ந்த வராயிருந்தால், தாம் பெற்ற அப் பெறலரும் பேற்றின் அருமை பெருமையினை யுணர்ந்து, தம் தந்தைபால் எத்துணையன்பும் எத்துணை நன்றியும் உடையராய் நடந்திருத்தல் வேண்டும்! ஆனால், அப் புதல்வர் செய்த தீவினையோ, அன்றி அவர்க்குள்ள இறுமாப்போ, அன்றி அவர் தஞ் சீர்திருந்தா இயற்கையோ அவரை அவ் விழுமிய தந்தைபால் அன்பும் நன்றியும் இல்லாமற்செய்ததோடு, அவர் அவனொடு கலாய்த்து அவனைத் தாக்குதற்கும் அவரை ஏவியது! இப் புதல்வர் செயல் கொடிது! கொடிது! இவரது கொடிய செயலை நினைக்குங்கால் நல்லார் எவர்க்குத்தாம் நெஞ்சம் இரண்டாய்ப் பிளவாது! இத்துணைத் தீயராய் இருந்தமையாற்றான், ஆன்றமைந்தடங்கிய அறவுள்ளம் வாய்ந்தவனான இம் மன்னர்பிரான், அவ் ருவரையுந் தன் புதல்வரென்றும் பாராது செயிர்த்து அவர்மேற் போர்செய்தற் கெழுந்தனன். இங்ஙனம் புதல்வருந் தந்தையும் ஒருவரையொருவர் பகைத்துப் போர்புரிதற்கெழுந்த எழுச்சி நடைபெற்றிருந்தால், அவ்விரு திறத்தாரில் ஒருவர் ஒருவரை அழித்து மகார் தந்தையை யழித்த அல்லது தந்தை மகாரையழித்த மாயா வசையினை இத் தமிழுலகில் வழிவழி நிறுத்தியிருப்பார்! ஆனால், அவ் வசை யுண்டாகாவாறு ஆ ண்டும் ஒரு நல்லிசைப்புலவர் அவ் விருதிறத்தார்க்கும்

L

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_10.pdf/83&oldid=1579706" இலிருந்து மீள்விக்கப்பட்டது