உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 10.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கேண்மை

முற்காலப் பிற்காலத் தமிழ்ப்புலவோர்

57

கொண்டிருந்தமையும் அவரும் அங்ஙனமே

அவனொடு பெருநட்புச் செய்திருந்தமையுந் தமிழ்மக்களாவா நினைந்து நினைந்து

ரனைவருந் மகிழற்பாலார்.

தம்முள்ளத்திருத்தி

ன்னும் பிசிராந்தையாரொடு மட்டுமேயன்றிப், பொத்தியாரோடுங் கோப்பெருஞ்சோழன் ஆருயிர்க் கேண்மை கொண்டொழுகினமை,

‘கோழியோனே கோப்பெருஞ் சோழன்

பொத்தில் நண்பிற் பொத்தியொடு கெழீஇ வாயார் பெருநகை வைகலும் நக்கே’

(புறநானூறு 212)

என்னும் பிசிராந்தையார் செய்யுளால் நன்கு தெளியப்படு கின்றது, உயிர்நீத்தற்கு வடக்கிருந்த கோப்பெருஞ்சோழனைப் பிரியகில்லாது பொத்தியாரும் ஒருங்குயிர் நீத்தற்கு அவன்பாற் போந்தனரென்பதூஉம், அப்போது பொத்தியார் மனைவி கருக்கொண் டிருந்தமையால் அதனை யறிந்த அவ் வேந்தன் "மகன் பிறந்தபின் வாரும்!" என்று அவரைப் போக்கி உயிர்நீத்துவிட, அவருந் தமக்கு மகன் பிறந்த பின் மீண்டுவந்து தாமும் அவன்பக்கத்தே கிடந்து உயிர்விடுதல் குறித்து இடம் வேண்டினரென்பதூஉம் அவர் அப்போது சொல்லிய,

"அழலவிர் வயங்கிழைப் பொலிந்த மேனி நிழலினும் போகாநின் வெய்யோள் பயந்த புகழ்சால் புதல்வன் பிறந்தபின் வாஎன

என்இவண் ஒழித்த அன்பி லாள!

எண்ணா திருக்குவை அல்லை!

என்இடம் யாது? மற்றிசைவெய் யோயே!”

(புறநானூறு 222)

என்னும் உருக்கமான செய்யுளால் உணரப் பெறுகின்றேம்.

இவ்வாறெல்லாந் தமிழ்ப்பெரும் புலவர்க்கு ஆருயிர் நண்பனாயுந், தானும் நல்லிசைப் புலமைமிக்க நாவலனாயும் ளங்கிய இக் கோப்பெருஞ் சோழவேந்தன், தன்னொடு மாறுபட்டுத் தன்மேற் போர்க்குவந்த தன்புதல்வர் இருவர் மேற் சீற்றங்கொண்டு தானும் அவர்மேற் போர்புரிதற்கு எழுந்தன னென்னுஞ் செய்தியை உணருங்கால் எவர்க்குத் தான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_10.pdf/82&oldid=1579705" இலிருந்து மீள்விக்கப்பட்டது