உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 10.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56

மறைமலையம் 10

பிசிராந்தையார் என்னும் புலவர் பெருமான், தன்னைப் பிரிந்திருக்க லாற்றாது தன்பால் வந்து தாமுந் தம் இன்னுயிர் நீப்பரென அவன் கூற, அவன்பாலிருந்த சான்றோர், 'அவர்வாரார்' என எதிர்மறுத்துரைப்ப, அதற்கு அச் சோழ வேந்தன்,

"தென்னம் பொருப்பன் நன்னாட் டுள்ளும்

பிசிரோன் என்ப என் உயிர்ஓம் புநனே

செல்வக் காலை நிற்பினும்

அல்லற் காலை நில்லலன் மன்னே

وو

(புறநானூறு. 215)

என்று தனக்கும் அவர்க்குமுள்ள பிரியாநட்பின் கெழுதகைமை யினை அவர் அறிய எடுத்தோதினன். அவன் ஓதியவாறே பின்னர்ச் சிலநாட்களிற் பிசிராந்தையார் தம்மாருயிர் நண்பனான கோப்பெருஞ்சோழன் தன்னின்னுயிர் நீத்தற்கு வடக்கிருந் தானென்பது கேள்வியுற்று அவன்பாற் போந்து அவனொடு ஒருங்குயிர் நீத்தனர். இவ் வரும்பெருங்கேண்மை நிகழ்ச்சியை நேரிருந்து கண்டு வியந்து ஆற்றராகிய பொத்தியார்,

“நினைக்குங் காலை மருட்கை யுடைத்தே

எனைப்பெருஞ் சிறப்பினோடு ஈங்கிது துணிதல்! அதனினும் மருட்கை யுடைத்தே பிறன் நாட்டுத் தோற்றஞ் சான்ற சான்றோன் போற்றி

இசைமர பாக நட்புக்கந் தாக

இளையதோர் காலை ஈங்கு வருதல்!

வருவன் என்ற கோனது பெருமையும்

அதுபழு தின்றி வந்தவன் அறிவும்

வியத்தொறும் வியத்தொறும் வியப்பிறந் தன்றே!

அதனால், தன்கோல் இயங்காத் தேயத்து உறையுஞ்

சான்றோன் நெஞ்சுறப் பெற்ற தொன்றிசை

அன்னோனை இழந்த இவ்வுலகம்

என்னா வதுகொல்! அளியது தானே!”

(புறநானுறு 217)

என நெஞ்சம் நெகிழ்ந்துரைத்த செய்யுளால் அதன்உண்மை ஐயுறுதலின்றித் துணியப்படும். இவ்வாற்றாற், கோப்பெருஞ் சோழவேந்தன் தன் ஆருயிரேயெனப் பிசிராந்தையாரைக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_10.pdf/81&oldid=1579704" இலிருந்து மீள்விக்கப்பட்டது