உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 10.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முற்காலப் பிற்காலத் தமிழ்ப்புலவோர்

55

குவட்டின்மிசை மங்கா - மாமணியாய்த் தங்கி மாப்பேரொளி வீசாநிற்கின்றது இவன், பாட்டும் ஆட்டமும் வல்லார்க்கு நிரம்பக் கொடுக்கும் வள்ளன்மையின் மிக்கோனென்பதும், அறநெஞ்சம் உடையாராற் புகழப்பட்ட செங்கோலரசு செலுத்துபவனென்பதும், அறிவுமிக்க பெரியாராற் புகழ்ந்து பேசப்படும் அன்பிற் சிறந்த அண்ணலா மென்பதுந், தனக்குரிய மகளிர் பால் மென்றன்மை வாய்ந்தவனாய் ஒழுகுபவ னென்பதுந், தன்னொடு மாறுபட்ட வலியுடையார்க்குத் தானும் வலிது செய்யுந் தறுகணாண்மை யுடையனென்பதுங், குற்றமற்ற கேள்வியினையுடைய அந்தணர்க்குப் புகலிட மாவனென்பதும், நல்லிசைப் புலவரான பொத்தியார்,

“பாடுநர்க் கீத்த பல்புக ழன்னே, ஆடுநர்க் கீத்த பேரன் பின்னே, அறவோர் புகழ்ந்த ஆய்கோ லன்னே,

திறவோர் புகழ்ந்த திண்ணன் பின்னே,

மகளிர் சாயல், மைந்தர்க்கு மைந்து,

துகளறு கேள்வி யுயர்ந்தோர் புக்கில்'

(புறநானூறு 221)

என அவன் நடுகல்லாய் நிற்றல்கண்டு உள்ளந்தேம்பிப் பாடிய பாவால் இனிதறியக்கிடக்கின்றன.

ச்

இத்துணைச் சிறந்த இச் சோழமன்னன் தன்புதல்வர் இருவர் தன்னைப் பகைத்துத் தன்னொடு பொரவந்தமையால், இனித் தான் உயிரோடிருத்தலாகாதென இம்மை வாழ்வை வறுத்துத் தன் அரசுதுறந்து வடநாட்டின்கட் சென்றோ அல்லது வடக்கு நோக்கியிருந்தோ தன்னுடம்பை மெலிவித்து உயிர்நீத்தலை மேற்கொண்டான். அஃது அப்போது அவன் பாடிய “செய்குவங் கொல்லோ நல்வினையெனவே" என்னும் அரிய செய்யுளில்,

“மாறிப் பிறவா ராயினும் இமயத்துக் கோடுயர்ந் தன்ன தம்மிசை நட்டுத்

தீதில் யாக்கையொடு மாய்தல் தவத்தலையே”

(புறநானூறு 214)

எனப்போந்த அடிகளால் அறியப்படும் இவ்வாறு அம் மன்னன் வடக்கிருந்தவழித், தான் அங்ஙனம் உயிர் நீத்தற்கு வடக்கிருத் தலைக் கேட்ட துணையானே தன் ஆருயிர் நண்பரான

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_10.pdf/80&oldid=1579703" இலிருந்து மீள்விக்கப்பட்டது