உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 10.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54

மறைமலையம் -10

முதலாக முதற்சொல்லிய மூன்றடிகளால் தெற்றென விளங்காநிற்கின்றது. அதனை யடுத்து இவன் இரண்டாவதாகக் கூறிய வஞ்சினவுரையால், இவன் செந்தமிழ்ப்புலவரது சேர்க்கையைப் பெரிது விழைந்தவனென்பதும், அஞ்ஞான்று தன் அவைக்களத்திருந்த புலவருள்ளெல்லாம் மதுரைக்காஞ்சி என்னும் முதுமொழி நூல் இயற்றிய மாங்குடி மருதனார் என்னும் நல்லிசைப் பெரும்புலவரையே தலைவராக வைத்துப் பாராட்டின னென்பதும் புலனாதல் காண்க. இனி, அதன்பின் மூன்றாவதாக இவன் எடுத்துரைத்த ஆணை மொழியால், வறுமையால் வாடிவந்த இரவலர் துன்பத்தைக் கண்டு இவன் சிறிதும் மனம்பொறாது அவரது வறுமைதீர நிறையக் காடுக்கும் வள்ளற்பெருந்தகையாதலுந் தெள்ளிதிற் பெறப்படு கின்றதன்றோ! இவன் பகர்ந்த இம் மூன்று வஞ்சின மொழி களாலும், இவன் தான் மேற்கொண்ட அரசியற் கடமையினை நன்குணர்ந்த செங்கோன் மன்னனாதலொடு, மக்களின் புறநலனைத் தருஞ் செங்கோலரசின் திறம்போலவே அவர் தம் அகநலனாகிய அறிவுவிளக்கத்தைத் தரும் புலவர் கூட்டத்தையும், இவ்வகப்புற நலன்களால் விளையற்பாலவாம் ஈ ஈகையறங்களையும் இவன் வேண்டியுஞ் செய்தும் நின்றமை நன்கு புலனாகின்றதன்றோ! இம்மன்னர் பெருமான் தான் தமிழ்க்கலைவல்ல நல்லிசைப்புலவனாய் வயங்கியதொடு, தன்போற் சிறந்த தமிழ்வல்ல சான்றோரையுந் அவைக்களத்து ஒருங்கு இருத்தி, அவர் தம்மால் தனித் தமிழ்மொழியை வளம்படுத்துவந்த அரும்பெருஞ்செயலுந் என்றும் நினைந்து நன்றி

தமிழ்மக்களெல்லாராலும்

பாராட்டுதற் குரித்தாகும்.

தன்

இனித், தமிழ்வல்ல சான்றோரைப் பழைய தமிழ் வேந்தர்களிற் பலர் தம்மோடொத்த நிலையில் வைத்து அரும்பெருநட்புச் செய்தும், மற்றும் பலர் அவரைத் தம்மினும் மேலான நிலையில் வைத்து அவரைத் தெய்வமாக வழிபட்டுப் போற்றியும் வந்த வரலாறுகளும் பல; அவற்றுள் ஒன்றிரண்டு ஈண்டெடுத்துக் காட்டுவாம் நல்லிசைப்புலவர்களான பிசிராந்தையார்க்கும் பொத்தியார்க்கும் ஆருயிர் நண்பனாய் விளங்கிய கோப்பெருஞ்சோழன் என்னும் வேந்தர்பெருமான் புகழ் பண்டைத் தமிழிலக்கிய மாப்பெரும் பொருப்பின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_10.pdf/79&oldid=1579702" இலிருந்து மீள்விக்கப்பட்டது