உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 10.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ய

முற்காலப் பிற்காலத் தமிழ்ப்புலவோர்

53

யறிதல்வேண்டின், தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் தன் பகைவர்மேல் சினந்துபாடிய வஞ்சினப்பாட்டை ஈண்டெடுத்துக்காட்டி விளக்கவே அது விளங்கும்; அது வருமாறு:

“நகுதக் கனரே நாடுமீக் கூறுநர்;

இளையன் இவனென உளையக் கூறிப் படுமணி இரட்டும் பாவடிப் பணைத்தாள் நெடுநல் யானையுந் தேரும் மாவும் படையமை மறவரும் உடையம் யாம் என்று உறுதுப் பஞ்சாது உடல்சினஞ் செருக்கிச் சிறுசொற் சொல்லிய சினங்கெழு வேந்தரை அருஞ்சமஞ் சிதையத் தாக்கி முரசமோடு ஒருங்ககப் படேஎனாயிற், பொருந்திய என்நிழல் வாழ்நர் செல்நிழற் காணாது கொடியன்எம் இறையெனக் கண்ணீர் பரப்பிக் குடிபழி தூற்றுங் கோலேன் ஆகுக!

ஒங்கிய சிறப்பின் உயர்ந்த கேள்வி

மாங்குடி மருதன் தலைவனாக

உலகமொடு நிலைஇய பலர்புகழ் சிறப்பிற்

புலவர் பாடாது வரைக என் நிலவரை!

ஞனை

புரப்போர் புன்கண் கூர

இரப்போர்க்கு ஈயா இன்மையான் உறவே!”

(புறநானூறு. 72)

என்னும் இச் சிறந்த பாட்டைப் பாடி வஞ்சினங் கூறுகின்றுழி, இம் மன்னர்பிரான் ஆண்டில் இளைஞனாயிருந்தன னென்பது இதன் இரண்டாம் அடியினாற் புலனாகின்றது. இவ்வரசிளை இளைஞனென்று இகழ்ந்தும், இவன் அரசாண்ட நாட்டைக் குறைத்துப் பேசியும் அஞ்ஞான்றிருந்த தமிழ் வேந்தர்கள் சிலர் இவனுக்குப் பெருஞ்சீற்றத்தை விளைத் தமையால், இவன் அவர்களோடு போர்புரிந்து வெல்வதுகுறித்து இதனை வெகுண்டு பாடினன். இவன் தன் அரசின்கீழ் வாழும் குடிமக்களின் நலத்தையும், அவர் தமது செங்கோன்மையை நெஞ்சாரப் புகழ்ந்து பேசுதலையுமே முதன்மையாய் விரும்பினவ னன்பது “என் நிழல் வாழ்நர் சென்னிழற் காணாது” என்பது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_10.pdf/78&oldid=1579701" இலிருந்து மீள்விக்கப்பட்டது