உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 10.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52

❖ LDMMLDMELD- 10 மறைமலையம்

காட்டப்பட்டது. இன்னும், ஒளவையார், ஒக்கூர் மாசாத்தியார், காக்கைபாடினியார் நச்செள்ளையார், காவற்பெண்டு, குறமகள் இளவெயினி, நக்கண்ணையார், பேய்மகள் இளவெயினி, மாற்பித்தியார், மாறோக்கத்து நப்பசலையார், வெண்ணிக் குயத்தியார், வெறிபாடிய காமக் கண்ணியார் என்னும் மாதர்கள் செந்தமிழ்ப் புலமையில் மிகச் சிறந்து விளங்கினமை புறநானூற்றின்கண் அவர்கள் பாடிய பாட்டுக்களால் தெற்றென ளங்காநிற்கின்றது. குறச்சாதியிற் பிறந்த இளவெயினியர் இருவருங், குயச்சாதியிற் பிறந்த வெண்ணிக்குயத்தியாரும், மறச் சாதியிற் பிறந்த காவற்பெண்டும், பாணச்சாதியிற் பிறந்த ஒளவையாரும் பிறரும் நிகரற்ற நல்லிசைப்புலவராய் வயங்கினமையும், அவரெல்லாரும் ஏனை நல்லிசைப் புலவராலும் அரசர்களாலும் ஏதொரு வேறுபாடுமின்றிப் பாராட்டப்பட்டமையும் ஓருங்காற், கீழ்ச்சாதியிற் றோன்றிய பெண்பாலாருங்கூட அப் பண்டைநாளில் எவ்வளவு கல்வியிற் சிறந்தவராய், எவ்வளவு நாகரிகத்தின் மிக்கவராய் விளங்கின ரென்பது புலனாகின்றது! இது கொண்டு, அஞ்ஞான்றைக் து ( தமிழ்மக்கள் எவ்வளவு அறிவும் எவ்வளவு அன்பும் எவ்வளவு அருளும் எவ்வளவு அறமுங் கனிந்த பயன்மிகு நாகரிக வாழ்க்கை வாய்ந்தவராய்ப் பொலிந்தனரென்பதும் புலனா கின்றது! கல்வியறிவிற்சிறந்த பெண்மக்கள் உறையும் நாடு கடவுளர் உறையும் வான்நாடு ஆகுமேயல்லால், அவ்வறிவில்லா மாக்கள் திரியும் மண்ணாடு ஆகாதென்று தெளிமின்கள்! பண்டைநாளில் ஆண்பாலாரேயன்றிப் பெண் பாலாருங் கல்விப்புலமையிற் சிறந்து இத் தமிழகத்தில் விளங்கினாற்போல வேறெந்த நாட்டகத்தும் விளங்கியதில்லை. அஞ்ஞான்று அங்ஙனங் தமிழ்ப்புலமையிற் சிறந்து திகழ்ந்த ஆண் பெண்பாலார் ஒருவர் இருவர் சிலர் அல்லர், எண்ணிறந்ததோர் ஆவர்; இவ்வுண்மை, பழைய தமிழ் நூல்களைச் சிறிதாராய் வாரும் எளிதில் அறிவர்.

னிக் குடிமக்களேயன்றி, அக்காலத்திருந்த தமிழ் மன்னர்கள் அத்துணைப்பேருந் தமிழ்க்கல்வியறிவிற் சிறந்த புலவோராய் மிளிர்ந்தமை மேலெடுத்துக் காட்டிய பூதப் பாண்டியன் பாட்ட யன் பாட்டாலும் பாண்டியன் நெடுஞ்செழியன் பாட்டாலும் நன்கு விளங்கற்பாலதேயாம். இன்னும் அதனை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_10.pdf/77&oldid=1579700" இலிருந்து மீள்விக்கப்பட்டது