உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 10.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முற்காலப் பிற்காலத் தமிழ்ப்புலவோர் கீழ்ப்பால் ஒருவன் கற்பின்

மேற்பால் ஒருவனும் அவன்கட் படுமே"

51

(புறநானூறு, 183)

என்னும் அருந்தமிழ்ப் பாட்டினால் நன்கறிந்து கொண்மின்கள்! இவ் விழுமிய செய்யுளை இயற்றிய பாண்டியன் நிகரில்லா வெற்றிவேந்த னாதலோடு செந்தமிழ்ப் புலமையிலும் எத்துணைச் சிறந்த திறம்பெற்றவனா யிருக்கின்றான்! இவனும் இவன் ன் காலத்து அரசர்களுஞ் செல்வர்களுமெல்லாங் கல்வியின் மிக்க புலவரையன்றி வேறெவரையுங் துணை கொளாது தமது அரசியலையும் வாழ்க்கையும் நடாத்தின பான்மை, “ஒரு குடிப் பிறந்த பல்லோருள்ளும், மூத்தோன் வருக என்னாது, அவருள், அறிவுடையோன் ஆறு அரசன் செல்லும் என்று அவர் கிளந்தெடுத்துக் கூறியவாற்றால் விளங்குகின்ற தன்றோ? அவர்கள் சாதி யுயர்வு தாழ்வு கருதாது, கல்வியறி வினையே முழுதும் பாராட்டிக் கீழ்ச்சாதியிற் பிறந்தாரையும் மேற்சாதியாரினும் மேலாக வைத்து அவர் கூறிய உறுதிமொழிவழியே ஒழுகினரென்பதூஉம், "வேற்றுமை தெரிந்த நாற்பா லுள்ளுங், கீழ்ப்பால் ஒருவன் கற்பின், மேற்பால் ஒருவனும் அவன் கட் படுமே” என்னு அப்பாண்டி வேந்தன் பகர்ந்தவாற்றால் நன்கறிகின்றனம் அல்லமோ? அஞ்ஞான்றை வேந்தர்கள் அறங்கூறுந் தமது அவைக்களத்தே, கல்வியறி வாற்றலிலும் நடுவுநிற்றலிலுந் திறப்பாடு வாய்ந்தாரையே ருத்தி முறை செய்து வந்தனர். இவ் வரும்பெருஞ் செங்கோலரசு முறை வழாப் பேராண்மை, ஓல்லையூர் தந்த பூதப்பாண்டியன் தன் பகைவர்மேற் படையெடுத்துச் செல்லுங்கால் வஞ்சினங்கூறிய வெஞ்சினப் பாட்டில்,

"அறன்நிலை திரியா அன்பின் அவையத்துத்

திறன்இல் ஒருவனை நாட்டி முறைதிரிந்து மெலிகோல் செய்தேன் ஆகுக!”

(புறநானூறு)

எனப் போந்த பகுதியில் எத்துணை உரமாக எடுத்துரைக்கப் பட்டிருக்கின்றது!

இப் பூதப்பாண்டியன் மனைவி வனைப் போலவே தமிழ்ப் புலமையின் மிக்கவளாயிருந்தமை முன்னரே யெடுத்துக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_10.pdf/76&oldid=1579698" இலிருந்து மீள்விக்கப்பட்டது